கொரோனா: மருத்துவத்துறை சார்ந்த அத்தனைப் பணியாளர்களுக்கும் ₹50 லட்சம் காப்பீடு

இத்திட்டத்தின் மூலம் 20 லட்சம் சுகாதாரத்துறை ஊழியர்களுக்குப் பலன் கிடைக்கும்.

கொரோனா: மருத்துவத்துறை சார்ந்த அத்தனைப் பணியாளர்களுக்கும் ₹50 லட்சம் காப்பீடு
மாதிரிப்படம்
  • Share this:
மருத்துவத்துறை சார்ந்த அத்தனைப் பணியாளர்களுக்கும் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு வழங்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கொரோனா தாக்கத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் சிறப்புப் பொருளாதார திட்டத்தை அறிவித்துப் பேசியுள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் கூறுகையில், “மருத்துவத் துறையைச் சார்ந்த அத்தனைப் பணியாளர்கள் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு வழங்கப்படும்.

இது மருத்துவர்கள், பார்மஸி பணியாளர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் என அத்தனைப் பேருக்கும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தும். இத்திட்டத்தின் மூலம் 20 லட்சம் சுகாதாரத்துறை ஊழியர்களுக்குப் பலன் கிடைக்கும்.


கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க உதவும் அத்தனை சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் உதவும் வகையிலேயே இந்தக் காப்பீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் ஏழை மக்களுக்கு உதவ 1.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பிரதம மந்திரி ஏழை நலவாழ்வு திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் பார்க்க: 
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்