CoronaVirus : இதை செய்யாவிட்டால் 2ஆவது அலையை விட மோசமான நிலை ஏற்படும் - மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ்

தடுப்பூசி மூலம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தாக்கக் கூடியது என்பதால், தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

  • Share this:
கொரோனா 2ஆவது அலை தாக்கம் நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில், டெல்லியிலும் குறைந்துள்ளது. இதனால் மாநில அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் உரிய சமூக இடைவெளி இன்றி உலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், டெல்லி அப்போலோ மருத்துவமனையின் மூத்த டாக்டர் சுரன்ஜித் சாட்டர்ஜி கூறுகையில், “கொரோனா கால பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால், கட்டுப்பாட்டு விதிகளை மீறினால், விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தாவிட்டால் எங்களுக்கு மீண்டும் பிரச்சனைதான்” என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், “மக்கள் முக கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல், சட்டம் ஒழுங்கை அமல்படுத்துவோர் அவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கவில்லை என்றால், நிச்சயமாக பிரச்சனை ஏற்படும். 2ஆவது அலையை விட மோசமான நிலை ஏற்படும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘டெல்டா பிளஸ்’ உருமாற்ற கொரோனா வைரஸ் 3ஆவது அலைக்கு அடித்தளமிடுமா என்ற பீதி ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் இது, தடுப்பூசியால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி தாக்கும் வல்லமை கொண்டது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் 2ஆவது அலை வெகுவாக குறைந்து வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் 3ஆவது அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம், ஏஒய்.1 எனப்படும் இந்த புதிய உருமாற்ற வகை கொரோனா வைரசை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த வைரசின் ஸ்பைக் புரதம் கே417என் என்ற உருமாற்ற வகையை சேர்ந்ததாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்பைக் புரதம், மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாண்டி பாதிக்கக் கூடியது என கூறப்படுகின்றது.

இதனால், தடுப்பூசி மூலம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தாக்கக் கூடியது என்பதால், தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போதைய நிலையில், டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் 6 பேரை தொற்றி உள்ளது. இங்கிலாந்தில் 36 பேருக்கு இந்த புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2 பேர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்குப் பிறகு டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மருத்துவ நிபுணர்கள் மத்தியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Must Read : கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாய் செலுத்தும் திட்டம்... இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

இந்நிலையில், டெல்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவன இயக்குநர் அனுராக் அகர்வால் , புதிய உருமாற்ற வைரசின் தரவுகள் குறைவான அளவே இருப்பதால் இப்போதைக்கு அந்த வைரசை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் நோயின் தீவிரம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை, இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் பரவுவதற்கான ஆதாரங்களும் இல்லை எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Published by:Suresh V
First published: