கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாப்பது எது? ஆய்வில் புதிய தகவல்!

கோப்புப் படம்

கெரோனா வைரஸில் இருந்து முழுமையாக விடுதலைபெற உலகம் முழுவதும் இருக்கும் ஆய்வாளர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அதிக வென்டிலேட்டர் இருக்கும் பகுதியில் முகக் கவசத்துடன் சமூக இடைவெளியை பின்பற்றுபவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

கெரோனா வைரஸில் இருந்து முழுமையாக விடுதலைபெற உலகம் முழுவதும் இருக்கும் ஆய்வாளர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். முதல் அலை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இன்னும் மக்களை விட்டு அகலாத நிலையில், தற்போது 2வது அலை முன்பை விட வேகமாக பரவி வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் விரைவில் கொரோனாவில் இருந்து விடுபட்டுவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை மகராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகளான சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் மட்டுமே சிறந்த வழி என ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், முகக் கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றினால் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியுமா? என்பது குறித்து புளோரிடா பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

குறிப்பாக, பள்ளிகளிலும், பேருந்து, ரயில் மற்றும் விமான பயணங்களின்போது இது எத்தகைய பாதுகாப்பை வழங்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆய்வாளர்கள் ஆய்வை நடத்தினர். அதில், முகக் கவசத்துடன் வென்டிலேட்டர் அறையில் இருப்பவர்களுக்கு குறைவான அளவில் கொரோனா பாதிப்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், நேரடியான கொரோனா தாக்கத்தை குறைப்பதில் முகக் கவசம் முக்கிய பங்கு வகிப்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Also read... Explainer: இந்த வருடம் நடக்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய தகவல்கள்!

709 சதுர அடி பரப்பளவு கொண்ட, 9 அடி உயரமுள்ள அறை ஒன்றை ஆய்வாளர்கள் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தினர். இதில் இரண்டு பரிசோதனைகளை அவர்கள் செய்தனர். முதல் பரிசோதனையில் வென்டிலேட்டர் இல்லாமலும், மற்றொரு பரிசோதனையில் வென்டிலேட்டர் இல்லாமலும் ஆய்வை நடத்தினர். பள்ளி மற்றும் கல்லூரி அறைகளுக்குள் கொரோனா பரவலின் வேகம் குறித்து கண்டறிவதற்கு வெல்ஸ்-ரிலே மற்றும் கம்ப்யூட்டேஷனல் ஃப்ளூயிட் டைனமிக்ஸ் (Wells-Riley and Computational Fluid Dynamics models) சோதனை பின்பற்றப்பட்டது.

விமானம், ரயில் உள்ளிட்ட பயணங்களில் பரவும் சாத்தியக்கூறுகளை ஆராய கம்யூடேஷனல் ப்ளூயிட் டைனமிஸ் (Computational Fluid Dynamics models) முறை கடைபிடிக்கப்பட்டது. வகுப்பறைக்கு முன்பு ஆசிரியர் நின்றுகொண்டிருந்தார். அதில், வென்டிலேட்டர் அதிகம் உள்ள அறையில் சமூக இடைவெளியுடன் இருந்தவர்களைக் காட்டிலும், வென்டிலேட்டர் இல்லாமல் சமூக இடைவெளியுடன் இருந்தவர்கள் 40 முதல் 50 விழுக்காடு அதிகம் பாதிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். முகக் கவசத்திற்குள் இருக்கும் சூடான காற்று, வெளிப்புறத்தில் இருந்து வரும் ஏரோசோல்களை அழித்து விடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: