கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது மட்டுமே தீர்வாக அமையும் : மருத்துவ நிபுணர்கள்

கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், முகக்கவசம் அணிவது மட்டுமே தற்போதைக்கு தீர்வாக அமையும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்னுதாரனமாக ஊஹான், இத்தாலி மட்டும் நியூயார்க்கை மேற்கோள் காட்டுகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது மட்டுமே தீர்வாக அமையும் : மருத்துவ நிபுணர்கள்
கோப்புப் படம்
  • Share this:
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முகக்கவசங்களே முன்னணியில் நிற்பதாக அறிவியலாளர்கள் ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றால் முகக்கவசங்கள் மனித வாழ்வின் ஒரு பகுதியாகவே மாற்றியுள்ளது. ஆனாலும் பலர் கட்டுப்பாடுகளுக்கு அஞ்சியே முகக்கவசங்களை அணிந்து வருகின்றனர். கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில், காவல்துறையினர் கண்ணில் படாத பகுதிகளில் முகக்கவசங்களை விலக்கிக் கொள்வதை காணமுடிகிறது.

மாதிரிப் படம்



கொரோனா முதல்முதலில் வெளிப்பட்ட சீனாவின் ஊஹான், பெருந்தொற்று மையங்களாக அச்சமூட்டிய இத்தாலி, நியூயார்க் ஆகியவற்றில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தங்கள் கருத்தை ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர்.

ஏப்ரல் 6 ஆம் தேதி இத்தாலியிலும், ஏப்ரல் 17 ஆம் தேதி நியூயார்க்கிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதன் காரணமாக ஏப்ரல் 6 முதல் மே 9 ஆம் தேதி வரை இத்தாலியில் 78,000 பேரும், ஏப்ரல் 17 முதல் மே 9 ஆம் தேதி வரை 66,000 பேரும் கொரோனா தொற்றிலிருந்து தப்பியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான ஆய்வு முடிவுகளை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழங்களின் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதையே தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்களும் வலியுறுத்துகின்றனர்.

80 விழுக்காடு மக்கள் முகக்கவசம் அணியும் பகுதிகளில் 92 விழுக்காடு அளவுக்கு தொற்று பரவல் குறைவதாக அமெரிக்க ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாகவே முகக்கவசத்தை ஆண்கள் மிகக்குறைவாக பயன்படுத்துவதாகவும், முகக்கவசம் அணிவதை அவமானத்துக்கு உரியதாக உணர்வதாகவும், பலவீனமானவர்களாக காட்டும் என ஆண்கள் கருதுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.



1918- ஆம் ஆண்டு உலகையே ஆட்டிப்படைத்த ஸ்பானிஷ் ஃபுளுவின் போது மக்கள் முகக்கவசங்கள் அணிந்தே நோய் பரவலை கட்டுப்படுத்தினர். அப்போது முகக்கவசம் அணிவதை அனைத்து நாடுகளும் கட்டாயப்படுத்தி இருந்தன. ஸ்பானிஷ் ஃபுளுவினால் அதிக பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 100 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

கல்வான் பள்ளதாக்கில் இந்திய - சீனா மோதல்: 1962 ஆம் ஆண்டு என்னதான் நடந்தது?

 
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading