200 விமானங்கள், 100 புல்லட் ரயில்கள் தயார்... சுதந்திர காற்றை சுவாசித்த 1.11 கோடி மக்கள்... இயல்பு நிலைக்கு திரும்பிய ஊஹான்...!

200 விமானங்கள், 100 புல்லட் ரயில்கள் தயார்... சுதந்திர காற்றை சுவாசித்த 1.11 கோடி மக்கள்... இயல்பு நிலைக்கு திரும்பிய ஊஹான்...!
  • News18
  • Last Updated: April 9, 2020, 8:29 AM IST
  • Share this:
கொரோனா வைரசின் தாக்கம் முதன்முதலாக கண்டறியப்பட்ட சீனாவின் ஊஹான் நகரில் ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது, இதனை அந்நகர மக்கள் வரவேற்றுள்ளனர்

சீனாவின் ஹூபே மாகாணத்திலிருக்கும் ஊஹான் நகரில், கொரோனா பாதிப்பு முதல்முதலாகக் கடந்த ஜனவரி 10-ம் தேதி கண்டறியப்பட்டது. அங்கிருந்த கடல் உணவு விற்கும் சந்தைப் பகுதியில் பணிபுரிந்த 61 வயதான முதியவரின் இறப்புக்குப் பின்னரே இந்த வைரஸ் பரவல் உறுதிசெய்யப்பட்டது. தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் என்ன நடக்கிறது என்று புரிவதற்கு முன்னரே மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். கொரோனா தாக்கத்தினால் சீனாவில் தற்போது வரை 3 ஆயிரத்து 333 பேர் உயிரிழந்தனர் அதில் 2 ஆயிரத்து 571 பேர் ஊஹானைச் சேர்ந்தவர்கள்.

இதையடுத்து, வைரஸ் பரவுவதைத் தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. அதன்படி ஜனவரி 23-ம் தேதி ஊஹான் நகரம் முழுவதும் முடக்கப்பட்டது. போக்குவரத்து, கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் என அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன. அங்குள்ள 1 கோடியே 11 லட்சம் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். சீனாவின் பிற பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் ஊஹான் நகரத்துக்கு வரவழைக்கப்பட்டனர்


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரே வாரத்தில் 16 மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலை பெருமளவில் கட்டுப்படுத்தியது சீன அரசு.

அரசின் கெடுபிடிகளாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் கடந்த மூன்று வாரங்களில் ஊஹானில் மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரு வார காலமாக உயிரிழப்புகளும் ஏற்படவில்லை,

இந்த நிலையில், 76 நாள்களுக்குப் பின் ஊஹானில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட, மக்கள் சுதந்திர காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர்.

பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து திறக்கப்பட்டுள்ளன. ஊஹானிலிருந்து பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் மற்ற பகுதிகளுக்கு 200 விமானங்கள் புறப்படத் தயாராக உள்ளன. இவற்றின் மூலம் 10,000 பேர் வரை நகரை விட்டு வெளியேறலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கிட்டத்தட்ட 100 அதிவேக ரயில்கள் ஊஹாகனிலிருந்து மற்ற நகரங்களுக்குச் செல்ல தயார் நிலையில் உள்ளன. விமானம் மற்றும் ரயில்கள் மூலம் 65 ஆயிரம் பேர் ஊஹானை விட்டு வெளியேறியுள்ளர்.

இதேபோல் சாலைப் போக்குவரத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தளர்வை வரவேற்கும் விதமாக இரவே கட்டடங்களில் வண்ண விளக்குகளைப் பரவவிட்டு தங்கள் மகிழ்ச்சியை ஊஹான் மக்கள் வெளிப்படுத்தினர்.இப்படி தளர்வுகள் கொண்டுவந்தாலும் சில கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது. பாதுகாப்பு கருதி பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஊஹானிலிருந்து வெளியேற விரும்புபவர்கள் சீன சுகாதாரத்துறையின் செயலியில் தங்களின் விவரங்கள், பயணக் குறிப்புகளைப் பதிவு செய்ய வேண்டும். மேலும் தாங்கள் பூரண உடல் நலத்துடன் இருக்கிறோம் என்பதை குறிக்கும் பச்சை நிற கார்டை காண்பித்தால் மட்டுமே நகரை விட்டு வெளியேற முடியும், நகருக்குள் தனி மனிதர்கள் உலா வருவது, தொழிற்சாலைகள் இயங்குவதில் விதிமுறைகள் என பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் முடிந்தவரை வீட்டில் தங்குமாறு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

முகக்கவசம் அணிவது, உடல் வெப்ப நிலை பரிசோதனை ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading