கொரோனா பாதித்து பிரபல நடிகை மரணம் - திரைத்துறையினர் இரங்கல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை அஷலதா வப்கோங்கர் மரணமடைந்தார். அவருக்கு வயது 79.

கொரோனா பாதித்து பிரபல நடிகை மரணம் - திரைத்துறையினர் இரங்கல்
நடிகை அஷலதா வப்கோங்கர்
  • News18 Tamil
  • Last Updated: September 22, 2020, 7:27 PM IST
  • Share this:
பொருளாதார காரணங்களுக்காக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் பிரபல நடிகை அஷலதா வப்கோங்கர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்புக்காக கலந்து கொண்ட அஷலதா வப்கோங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


மராத்தி மற்றும் கொங்கனி மொழியில் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்து வாழ்க்கையைத் தொடங்கிய அஷலதா, நூற்றுக்கும் மேற்பட்ட இந்தி மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அதைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவு குடும்பத்தாரையும் திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading