கோவில்பட்டியில் கொரோனாவுக்காக முழு உடல் பாதுகாப்பு கவசம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்!

கோவில்பட்டியில் கொரோனாவுக்காக முழு உடல் பாதுகாப்பு கவசம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்!

முழு உடல் பாதுகாப்பு கவசம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் அதன் உரிமையாளர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
கோவில்பட்டி அருகே கொரோனா முழு உடல் பாதுகாப்பு கவசம் (கொரோனா பி.பி.கிட்) தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உலகினை அச்சறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ பணிகளுக்கு முகக்கவசம், முழு உடல் பாதுகாப்புக் கவசங்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் கொரோனோ பி.பி. கிட் என்று அழைக்கப்படும் முழு உடல் பாதுகாப்புக் கவசங்கள் தயாரிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிறுவனத்தில், ஒரு நாளைக்கு 1500 கவசங்கள் தயாரிக்கப்படுகிறது என்றும் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் அதன் உரிமையாளர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா, கேரளா அரசுகளும் இங்குள்ள தனியார் மருத்துவமனைகளும் அதிகளவில் இதை வாங்கிச் செல்லும் நிலையில், தமிழக அரசு இதனைக் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதலின் படி 90 சீசம் ஸ்பன் துணி மெட்ரியலில் முழு பாதுகாப்பு உடல் கவசம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், தண்ணீர் ஊற்றினால் கூட அது கீழே சிந்தமால் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் வைரஸ் தாக்க முடியாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

Also see:
Published by:Rizwan
First published: