திருப்பரங்குன்றத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 60 வயது முதியவருக்கு இரண்டு நாட்களாக மூச்சுத் திணறல் இருந்துள்ளது. ஆனாலும், யாரும் சிகிச்சை அளிக்க வராத நிலையில், விரக்தியடைந்த அவர், முகாமின் இரண்டாவது தளத்தில் இருந்து கீழே குதித்து விட்டார்.
தலையில் காயத்துடன் உயிருக்கு போரோடிய அவரை, கொரோனா அச்சம் காரணமாக காப்பாற்ற கூட யாரும் வரவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், சிலர் முறையிட்ட போது, அவர்கள் அலட்சியமாக பதில் கூறிய காட்சிகளும் வெளியாகியுள்ளன.
அரை மணி நேரத்திற்குப் பின் அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.