கொரோனா வைரஸ் தன்னை தாக்கியதாக கருதி தற்கொலை செய்துகொண்ட நபர்...!

கொரோனா வைரஸ் தன்னை தாக்கியதாக கருதி தற்கொலை செய்துகொண்ட நபர்...!
  • News18
  • Last Updated: February 12, 2020, 11:57 AM IST
  • Share this:
தன்னை கொரோனா வைரஸ் தாக்கியதாக கருதிக்கொண்டு ஆந்திராவைச் சேர்ந்த 54 வயதான நபர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கி தற்போது உலக அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸுக்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டறியும் பணியில் ஆராச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இந்த வைரஸ் குறித்த அச்சம் அனைவரிடமும் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் சித்தூரை அடுத்த தொட்டம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் 54 வயதான பாலகிருஷ்ணையா.மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக சில நாட்கள் முனபு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.


இதயம் பலவீனமாக இருப்பதாகவும் வெளியிடங்களுக்கு செல்லும்போது தூசுகளை தவிர்க்க மாஸ்க் அணியும் படியும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கருதிக்கொண்டுள்ளார் பாலகிருஷ்ணையா.

மருத்துவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் சமாதானம் ஆகவில்லை. உறவினர்கள் கூறியும் அதை ஏற்க பாலகிருஷ்ணையா மறுத்து விட்டார். யாரும் தன்னிடம் நெருங்கி வரவேண்டாம் என்று கூறியபடி இருந்திருக்கிறார். இந்நிலையில் ஊர் மக்களுக்கு தமது வைரஸ் பாதிப்பு பரவிவிடும் என்று ஆழமான எண்ணியவர் கடைசியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அவரது மனைவி கூறுகையில், தொற்று இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதாக பேச ஆரம்பித்துள்ளார். மற்றவர்களுக்கு பரவ கூடாது என்பதற்காக முகமூடி அணியுமாறு சொன்னார். அவருக்கு அதிக விழிப்புணர்வு இல்லை. விசித்திரமாக நடந்து கொள்ளத் தொடங்கிய அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றார்.அவரது மகன் கூறுகையில், ”தமக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக நம்பிய அவர், யாரையும் பக்கத்தில் அணுக விடவில்லை. நாங்கள் அவருக்கு அருகில் செல்ல முயன்றபோது அவர் எங்கள் மீது கற்களை வீசத் தொடங்கினார். கிராமத்திற்கு ஆபத்து என்பதால் உடனடியாக தனது வாழ்க்கையை முடிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Read: கொரோனா வைரஸ் என்றால் என்ன...? எப்படி பரவுகிறது...? தற்காப்பது எப்படி...?

Also See... 
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading