’மழை கோட்’ என நினைத்து பாதுகாப்பு கவச உடையை திருடிச் சென்றவருக்கு கொரோனா தொற்று

Corona | மழைக்கு அணியும் கோட் என நினைத்து பாதுகாப்பு கவச உடையை திருடிச் சென்றவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

’மழை கோட்’ என நினைத்து பாதுகாப்பு கவச உடையை திருடிச் சென்றவருக்கு கொரோனா தொற்று
பாதுகாப்பு கவச உடை
  • Share this:
நாட்டிலேயே அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று குணமடைபவர்கள் அதிகம் இருந்தாலும், அங்குதான் உயிரிழப்பும் அதிகம் உள்ளது. அங்கு, 4.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். அதே போல, 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், மது போதையில், கொரோனா முன்கள பணியாளர்கள் அணியும் பாதுகாப்பு கவச உடையை திருடி வந்து கொரோனா பாதிப்பை சந்தித்துள்ளார் வியாபாரி ஒருவர். நாக்பூரை சேர்ந்த நபர் காய்கறி வியாபாரி ஒருவர், அதீத மதுபோதையில் கழிவுநீரோடையில் விழுந்து கிடந்து காயம் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் உள்ள, மாயோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வீடு திரும்பியபோது பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடையை திருடிவந்துள்ளார். மேலும், அதை ரெயின் கோட் எனவும் 1000 ரூபாய் கொடுத்து புதிதாக வாங்கியதாகவும் தன் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.


ஆனால், அது கொரோனா முன்கள பணியாளர்கள் அணியும் பாதுகாப்பு கவச உடை என்பதை கண்டறிந்த அவரது நண்பர்கள், சுகாதார ஊழியர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து, அவர்கள் அப்பகுதிக்கு விரைந்து அந்த தடுப்பு கவசத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்து தீயில் போட்டு எரித்துள்ளனர்.

இதனை அடுத்து அந்த நபருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனை அடுத்து, அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading