வாடகை பணம் கேட்டதால் வீட்டு உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரை கத்தியால் குத்தியவர் கைது.. வீட்டு உரிமையாளர் மருமகள் உயிரிழப்பு..

கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்த நாராயணன் கடந்த 6 மாதத்திற்கு மேலாக வாடகை மற்றும் கடனாக வாங்கிய பணத்தை தராமல் இருந்துள்ளார். இதனை கேட்ட வீட்டின் உரிமையாளர் 3 பேரை கத்தியால் குத்தியுள்ளார்.

வாடகை பணம் கேட்டதால் வீட்டு உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரை கத்தியால் குத்தியவர் கைது.. வீட்டு உரிமையாளர் மருமகள் உயிரிழப்பு..
வாடகை கேட்டதால் வீட்டின் உரிமையாளரை கத்தியால் குத்திய நாராயணன்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 10:39 AM IST
  • Share this:
சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகர் 2-வது தெருவில் தனது சொந்த வீட்டில் சந்திரமோகன் என்பவர் தனது மகன் சதீஷ், மருமகள் சுகன்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பெயிண்டர் வேலை செய்து வரும் நாராயணன் என்பவர் குடியிருந்து வருகிறார். இவர், வீட்டு உரிமையாளரான சந்திரமோகனிடம் கொரோனா காலத்தில் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும் தெரியவருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்த நாராயணன் கடந்த 6 மாதத்திற்கு மேலாக வாடகை மற்றும் கடனாக வாங்கிய பணத்தை தராமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வாடகை பாக்கி மற்றும் வாங்கிய கடனை தரும்பி தருமாறும் வீட்டின் உரிமையாளர் சந்திரமோகன் கேட்டு வந்துள்ளார்.

ஆனால் நாராயணன் தன்னிடம் பணம் இல்லை என கூறி வந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் நாரயணன் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து மதுகுடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டின் உரிமையாளரான சந்திரமோகன் வாடகை பாக்கியை கேட்டுள்ளார். மது போதையில் இருந்த நாராயணனுக்கும், சந்திரமோகனுக்கும் இடையில் தகராறு எழுந்துள்ளது.

தகராறு காரணமாக கோபமாக வீட்டுக்குள் சென்ற நாராயணன் கத்தியை எடுத்து வந்து வீட்டின் உரிமையாளரான சந்திரமோகன் அவரது மகன் சதீஷ், சதீஷின் மனைவியான சுகன்யா ஆகியோரை வயிறு, விலா மற்றும் கழுத்திலும் பலமாக குத்தியுள்ளார்.


ரத்த வெள்ளத்தில் இருந்த மூன்று பேரையும் அக்கம்பக்கத்தினர் ஆட்டோவின் மூலமாக கே.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் படிக்க.. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்.ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மருமகள் சுகன்யா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும் கத்திக்குத்து பட்ட சந்திரமோகன் மற்றும் அவரது மகன் சதீஷ் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க...முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..வழக்கு பதிவு செய்த சூளைமேடு போலீசார் நாராயணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டு வாடகை பணம் கேட்டதால் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தார்களை கத்தியால் குத்தி  கொலை செய்த செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading