பால் வாங்கச் சென்ற கணவரை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டார்கள்: கண்ணீர்விடும் மனைவி - மறுக்கும் காவல்துறை

கோப்புப் படம்

 • Share this:
  மேற்கு வங்கத்தில் பால் வாங்கச் சென்றவர் காவல்துறையின் நடத்திய தடியடியால் அவர் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

  இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இந்தியாவிலுள்ள எல்லா மாநில மாவட்டங்களும் முடக்கப்பட்டுள்ளன. சாலைகளில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை காவல்துறையினர் கண்டித்து அனுப்பிவருகின்றனர். சில இடங்களில் காவல்துறையினர், தடியடி, தோப்புகரணம் போடவைத்தல், வாகனங்களைப் பறிமுதல் செய்தல், வழக்குப் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

  இந்தநிலையில், மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் பால் வாங்கச் சென்ற 32 வயது இளைஞர் காவல்துறை நடத்திய தடியடியில் உயிரிழந்துள்ளார் என்று உறவினர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். இதுகுறித்த தெரிவித்த உயிரிழந்தவரின் மனைவி, ‘என்னுடைய கணவர் லால் சுவாமி பால் வாங்குவதற்காக சென்றார். அப்போது, காவல்துறையினர் கூட்டத்தினர் மீது தடியடி நடத்தியது. அதில், காயமடைந்த எனது கணவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்’ என்று தெரிவித்தார்.

  இதுகுறித்து தெரிவித்த ஹவுரா மாவட்ட காவல்துறை துணை ஆணையாளர், ‘தடியடியால் ஒருவர் உயிரிழப்பு என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். பொதுமக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால், உயிரிழந்தவரின் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Also see:
  Published by:Karthick S
  First published: