• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • பறவைகளுக்கு தினமும் உணவு, தண்ணீர் வழங்கும் இளைஞர்!

பறவைகளுக்கு தினமும் உணவு, தண்ணீர் வழங்கும் இளைஞர்!

காகம்

காகம்

கொரோனாவின் பாதிப்பினால் பொதுமக்களே வெளியில் நடமாட முடியாத சூழலில் பறவைகள் உணவு தண்ணீர் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றன.

  • Share this:
    கன்னியாகுமரியில் இளைஞர் ஒருவர் பறவைகளுக்கு தினமும் உணவு, தண்ணீர் வழங்கி வருகிறார். காகம், பருந்து, மைனா போன்ற பறவைகள் பறந்து வந்து இவர் கொடுக்கும் உணவை உண்டு செல்கின்றன.

    கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள குற்றித்தாணி பகுதியை சேர்ந்தவர் ஷிபு. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் இருசக்கர வாகனத்தின் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார். சிறு வயது முதலே சமூக சேவையில் ஈடுபாடுள்ள இவர் மரம் வளர்ப்பது, பள்ளி மாணவர்களிடையே மரம் வளர்ப்பதை ஊக்குவிப்பது, மன நலம் பாதிக்கப்பட்டோரை தேடிப்பிடித்து அவர்களை குளிப்பாட்டி தலை முடிவெட்டியும் முகச்சவரம் செய்தும் புது துணிகளை அணிவித்தும் வந்தார்.

    பறவைகளுக்கு உணவு வழங்கும் இளைஞர்


    அதோடு தனது வீட்டின் அருகில் உள்ள காட்டில் சென்று பறவைகளுக்கு உணவு நீர் போன்றவற்றை வைத்தும் வந்தார். தற்போது கொரோனாவின் பாதிப்பினால் பொதுமக்களே வெளியில் நடமாட முடியாத சூழலில் பறவைகள் உணவு தண்ணீர் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றன.

    அதனால் அவைகளுக்கு தினமும் உணவு மற்றும் தண்ணீர் வழங்கி வருகிறார். இவரைக் கண்டவுடன் காகம், பருந்து, மைனா போன்ற பறவைகள் பறந்து வந்து இவர் கொடுக்கும் உணவை உண்டு செல்கின்றன.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: