COVID-19 | பெட்ஷீட்டுகளை கயிறாக்கி நான்காவது மாடியில் இருந்து தப்பித்த தனிமைப்படுத்தப்பட்ட நபர்! ஆஸ்திரேலியாவில் பரபரப்பு

பெட்ஷீட்டுகளை பயன்படுத்தி நீளமான கயிறாக மாற்றி, ஜன்னல் வழியே தப்பித்து சென்று விட்டார் என்று வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா காவல்துறை தெரிவித்துள்ளது.

பெட்ஷீட்டுகளை பயன்படுத்தி நீளமான கயிறாக மாற்றி, ஜன்னல் வழியே தப்பித்து சென்று விட்டார் என்று வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா காவல்துறை தெரிவித்துள்ளது.

  • Share this:
பிரிஸ்பேனிலிருந்து இன்டெர்ஸ்டேட் விமானத்தில் வெஸ்ட் கோஸ்ட் சிட்டிக்கு வந்த நபருக்கு, மாநில எல்லை நுழைவு விதிகளின் கீழ், நகருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் பயணிகள் தனிப்படுத்துதல் மிகவும் முக்கியமானது, மாநிலம் விட்டு மாநிலம் வரும் நபர்கள், விமானத்தில் வருபவர்கள் கட்டாயமாக சில நாட்கள் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு, கோவிட் நெகட்டிவ் என்ற சோதனை முடிவு வந்த பிறகே, நகருக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தை சேர்ந்த ஒருவர், ஊருக்குள் செல்ல அனுமதி பெற, ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். ஹோட்டலின் நான்காவது மாடியில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர், பெட்ஷீட்டுகளை ஒன்றோடொன்று கட்டி, கயிறாக மாற்றி, நான்காவாது மாடியின் ஜன்னலில் இருந்து தப்பித்துள்ளார் என்று போலீஸ் தகவல் அளித்துள்ளனர்.

குவாரண்டைனில் இருந்து தப்பித்த இந்த நபர், பிரிஸ்பேனில் இருந்து வெஸ்ட் கோஸ்ட் சிட்டிக்கு, மாநிலங்களுக்கு இடையில் இயக்கப்படும் விமானத்தில் வந்துள்ளார். மாநில எல்லைகள் விதிகள் படி, வெஸ்ட் கோஸ்ட் சிட்டிக்குள் நுழைய இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவிட் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் அந்த நபருக்கு, இரண்டு நாட்களுக்குள் வெஸ்ட் கோஸ்ட் சிட்டியை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டது. மற்றும், தற்காலிகமாக ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு, அவர் தப்பித்துவிட்டார்.

Also Read | கொரோனா பயத்தில் 15 மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கிய குடும்பம்… கிராமத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

‘பெட்ஷீட்டுகளை பயன்படுத்தி நீளமான கயிறாக மாற்றி, ஜன்னல் வழியே தப்பித்து சென்று விட்டார்’ என்று வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா காவல்துறை ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தது. அது மட்டுமின்றி, காவல்துறை ஜன்னல் வழியாக அந்த நபர் தப்பிக்கப் பயன்படுத்திய பெட்ஷீட் கயிறின் புகைப்படமும் பதிவேற்றி இருந்தனர். கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து தெரு வரை பெட்ஷீட் கயிறு நீண்டிருந்தது.

புத்திசாலித்தனமாக திட்டமிட்டு தப்பிச் சென்றதாக அந்த நபர் நினைத்திருக்கலாம். ஆனால், அவரை போலீசார் சில மணிநேரங்களிலேயே கண்டுபிடித்து கைது செய்தனர். சட்ட விதிகளை மீறியதற்காகவும், பொய்யான, போலியான தகவல் வழங்கியதற்காகவும் அவரை கைது செய்தனர்.

அந்த நபர் யார் என்று இப்போது வரையிலும் மர்மமாகவே உள்ள நிலையில், நபரின் விவரங்களை கூற மறுத்துவிட்டனர் போலீசார். அவரின் வயது 39 என்றும், கோவிட் பரிசோதனை நெகட்டிவ் என்று வந்ததையும் மட்டுமே வெளியிட்டனர். மேலும், அவர் ஏன் தப்பித்துச் சென்றார் என்பதற்கான காரணத்தையும் அவர்கள் வெளியிடவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஆஸ்திரேலியாவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே கோவிட் தொற்று பாதித்தவர்கள் இருந்தனர். இதற்கு முக்கிய காரணம், தேசிய மற்றும் சர்வேதச எல்லைகளை இந்த நாடு மூடி வைத்திருப்பதே ஆகும். மேலும், வேறொரு மாநிலம் அல்லது நாட்டிலிருந்து யாரேனும் வந்தால், ஹோட்டல் குவாரண்டைன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Archana R
First published: