இறந்தவருக்கு கொரோனா தொற்று - முழு கிராமத்திற்கும் கொரோனா பரிசோதனை

புதுச்சேரியில் இறந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியாமல் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.

இறந்தவருக்கு கொரோனா தொற்று - முழு கிராமத்திற்கும் கொரோனா பரிசோதனை
இறுதி ஊர்வல பங்கேற்பால் கிராமத்திற்கே பரிசோதனை
  • Share this:
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கம் கிராமம் தர்மபுரி நகரை  சேர்ந்தவர் கந்தசாமி. டிரைவரான இவர் கடந்த 19 -ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

அப்போது அவருக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில்  முடிவு வருவதற்குள் அவரது உறவினர்கள் அரசியல்வாதி ஒருவரின் சிபாரிசுடன் உடலை வாங்கி வந்து கடந்த 20-ம் தேதி அடக்கம் செய்துவிட்டனர். அவரது ஊர்வலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ALSO READ :  மரம் ஏறும் மலைப் பாம்பு..! மலைக்க வைக்கும் வைரல் வீடியோ


இந்நிலையில், இறந்துபோன கந்தசாமிக்கு கொரோனா தொடர்பு இருப்பது உறுதியானது. இதனால் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அப்பகுதி கிராம மக்கள் கொரோனா அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கந்தசாமியின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான முடிவுகள் 28-ம் தேதி  வெளியாகின.

இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால்  கிராம மக்கள் அனைவரும் பீதி அடைந்தனர்.இத்தகவல் அறிந்த சுகாதார துறை அதிகாரிகள் மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக சிறப்பு பரிசோதனை முகாமை கூடப்பாக்கம் அரசு பள்ளியில் நடத்தியது. இதில் குழந்தைகள் முதல் முதியோர் வரை 150-க்கும் மேற்பட்டோருக்கு உமிழ் நீர் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading