கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் கிடைக்காமலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் கிடைக்காமலும் அவதிப் பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜாவித் கான் என்பவர், தனது ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்.
இதுபற்றி ஜாவேத் கூறும்போது, ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதை செய்தி சேனல் கள் மற்றும் சமூக வலைதளங்களில், பார்த்தேன். அதனால் என் ஆட்டோவை ஆம்புலன்ஸ் போல மாற்றி உதவ முடிவு செய்தேன். என் மனைவியின் நகைகளை விற்று இப்படி மாற்றி அமைத்துள்ளேன். என் போன் நம்பர் சமூக வலைதளங்களில் கிடைக்கிறது. ஆம்புலன்ஸ் கிடைக்காவிட்டால் மக்கள் என்னை அழைக்கலாம். கடந்த 15, 20 நாட்களாக இதை செய்து கொண்டிருக்கிறேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சீரியசான 9 பேரை, என் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறேன என்று கூறுகிறார்.
ஜாவேத் கானின் ஒரு நாள் வருமானம் ரூ.200-300 ஆக இருக்கும். பணப்பற்றாக்குறை ஏற்பட்ட போது தன் மனைவியின் நகைகளை அடகு வைத்து சமூக சேவையாற்றி வருகிறார் ஜாவேத் கான்.
சேவையில் மூழ்கி விட்ட ஜாவேத் கான் தான் குடும்பத்துக்காக நேரம் செலவழிப்பதே குறைந்து விட்டது என்கிறார்.
போபாலில் 1811 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு மொத்தம் 88,060 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சரி கொரோனா நோயாளிகளைக் கொண்டு செல்கிறாரே ஜாவேத் கான் அவர் தன் பாதுகாப்புக்கு என்ன செய்திருக்கிறார் என்று பார்த்தால் ஆட்டோவில் பயணிகளுக்கும் தனக்கும் இடையே பிளாஸ்டிக் ஷீல்டு போட்டு தடுப்பு ஏற்படுத்தியுள்ளார். எப்போதும் சானிட்டைசர் வைத்து கைகளை கழுவி வருகிறார்.
இவரது இந்த உதவி போபாலில் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bhopal, Corona Warriors, COVID-19 Second Wave, Madhya pradesh, Oxygen