துபாயில் இருந்து வந்த நபரால் அவரது குடும்பத்தினர் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு

துபாயில் இருந்து வந்த நபரால் அவரது குடும்பத்தினர் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோப்புப் படம்
  • Share this:
தனது தாயின் இறுதிசடங்கில் பங்கேற்க துபாயில் இருந்து வந்த நபரால், அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

மத்தியபிரதேசம் மொரேனா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது தாயின் இறுதிசடங்கில் பங்கேற்க துபாயில் இருந்து கடந்த மார்ச் 17ம் தேதி வந்துள்ளார். தாயின் இறுதிசடங்கு முடிந்த சில நாட்கள் கழித்து அவருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது.

அதைதொடர்ந்து அவருக்கும், அவரது மனைவியும் மேற்கொண்ட பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 28 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


இதுதொடர்பாக மொரேனா மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா தாஸ் கூறுகையில், “குழந்தைகள், பெண்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கி இருந்தது சிறிய வீடு என்பதால் அவர்களுக்கிடையே வைரஸ் தொற்று பரவி உள்ளது“ என்றார்.

இறுதிசடங்கில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் என்று உள்ளூர்வாசிகள் கூறியதை அடுத்து பங்கேற்வர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.









சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading