Home /News /coronavirus-latest-news /

பாடலுடன் கள்ளச்சாராயம் காய்ச்சும் வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்ட நபர் - தூக்கிய போலீஸ்

பாடலுடன் கள்ளச்சாராயம் காய்ச்சும் வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்ட நபர் - தூக்கிய போலீஸ்

கள்ளச்சாராயம் காய்ச்சி டிக்டோக்கில் வெளியிட்டவர் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சி டிக்டோக்கில் வெளியிட்டவர் கைது

ஆண்டவன் யாரையும் விட்டதில்லை என்ற பாடலுக்கு டிக் டாக் செய்த அவரை போலீசும் விட்டுவைக்காமல் கைது செய்து வழக்குப்பதிவு செய்து தக்க பாடத்தை புகட்டியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த ஒரு மாத காலமாக திறக்கப்படாத காரணத்தால் குடிமகன்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

மது குடித்தே ஆகவேண்டும் என்ற குடிமகன்கள் வீட்டிலேயே ஊறல் வைத்தும் மதுவகைகளை தயார் செய்து போலீஸில் வசமாக சிக்கி வந்தனர். இங்கு ஒருவர் ஒருபடி மேல் சென்று கள்ளச்சாராயம் காய்ச்சும் வீடியோவை தைரியமாக டிக் டோக்கில் பதிவு செய்து போலீஸிடம் வசமாக சிக்கியுள்ளார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பூஞ்சோலை என்கிற தமிழ்செல்வன். ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள காரணத்தால் சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் காய்ச்ச முடிவு எடுத்துள்ளார்.

அதன்படி தனது வீட்டின் கொள்ளையில் அடுக்கு பானைகளை வைத்து எரிசாராயம் காய்ச்சியுள்ளார். தொடர்ந்து அதோடு விட்டு விடாமல் அந்த வீடியோவை "ஆண்டவன் யாரையும் விட்டதில்லை, வாழ்க்கையின் வட்டத்திலே” என்ற பாடல் போட்டு டிக்டாக்கிலும் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவவே, தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் பூஞ்சோலை என்கிற தமிழ்செல்வனை கைது செய்து தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பின்னர் விடுவித்தனர்.

வேளாங்கண்ணி அருகே மது கிடைக்காத காரணத்தால் சொந்தமாக கள்ளச்சாராயம் காய்ச்சி டிக்டாக்கில் வீடியோ வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டவன் யாரையும் விட்டதில்லை என்ற பாடலுக்கு டிக் டாக் செய்த அவரை போலீசும் விட்டுவைக்காமல் கைது செய்து வழக்குப்பதிவு செய்து தக்க பாடத்தை புகட்டியுள்ளது.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: Lockdown, Nagapattinam, Tik Tok

அடுத்த செய்தி