Mamata Banerjee : பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எங்களை பேச விடவில்லை - மம்தா பானர்ஜி

மம்தா-மோடி

கொரோனா விவகாரம் குறித்து பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எங்களை பேச விடவில்லை என்றும் பாஜக முதலமைச்சர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டார்கள் எனவும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

  • Share this:
    இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி, “கொரோனா விவகாரம் குறித்து பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது நானும், இதர எதிர்க்கட்சி முதலமைச்சர்களும் பேச அனுமதிக்கப்படவில்லை. பாஜக முதலமைச்சர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் வெறும் பொம்மைகள் போன்று இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    எனவே, நாங்கள் அவமதிக்கப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்தோம். இது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை தகர்க்கும் முயற்சி. நாங்கள் சொல்வதை கேட்க இயலாத அளவுக்கு பாதுகாப்பற்ற நிலையில் பிரதமர் இருக்கிறார். ஆகவே இந்த கூட்டம் சூப்பர் தோல்வியாக முடிந்து விட்டது.

    மேற்கு வங்கத்தில் கொரோனாவை எப்படி சமாளிக்கிறீர்கள் என்றோ, தடுப்பூசி, ஆக்சிஜன் போதிய அளவுக்கு கையிருப்பு இருக்கிறதா என்பதைப் பற்றியோ பிரதமர் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. கருப்பு பூஞ்சை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு கருப்பு பூஞ்சை வந்திருக்கிறது.

    நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார். பிறகு ஏன் இறப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது, கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் உரிய திட்டம் இல்லை.” இவ்வாறு கூறினார்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ள வங்கி ஊழியர்கள், ரயில்வே, விமான நிலைய ஊழியர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் கொள்கையில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை.

    Must Read : மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் ரூ.4000 நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

     

    எனினும், நாங்கள் மேற்கண்டவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்காக குறைந்தபட்சம் 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தாமதமின்றி இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published: