கொரோனா முன்னெச்சரிக்கை : வெறிச்சோடிய சென்னை... வணிகர்கள் வேதனை

கொரோனா முன்னெச்சரிக்கை : வெறிச்சோடிய சென்னை... வணிகர்கள் வேதனை
கோப்பு படம்
  • Share this:
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னையில் வணிக வளாகங்கள், வர்த்தக பகுதிகள் மக்கள் கூட்டமின்றி காட்சியளித்தன.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31ம் தேதி வரை வணிக வளாங்கள், திரையரங்குகள், கல்வி நிறுவனங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை நகரம் ஒருவித பதற்றத்துடன் வெறிச்சோடி காணப்பட்டது.

குறிப்பாக, வர்த்தக பகுதியான தியாகராய நகர், மக்கள் கூட்டமின்றி களையிழந்து காணப்படுகிறது. ஷாப்பிங் வீதிகளான ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை வாடிக்கையாளர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. வாடிக்கையாளர்கள் வரராததால், ஒருவேளை சாப்பாட்டிற்கான வியாபாரம்கூட நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


வியாபாரிகள் மட்டுமின்றி ஷாப்பிங் செய்ய வரும் வாடிக்கையாளர்களை நம்பியுள்ள ஆட்டோ தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், கோயம்பேடு சந்தையிலும் கொரோனா பாதிப்பு எதிரொலித்துள்ளது. வாங்க ஆள் இல்லாததால் காய்கறிகள், பழங்கள் விற்பனை களையிழந்துள்ளது. குறிப்பாக, கொரோனா பாதிப்பால் ஏற்கெனவே வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பூக்கள் வரத்து குறைந்துள்ள நிலையில், தற்போது திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இருப்பில் உள்ள பூக்களும் தேக்கமடைந்துள்ளன.

இதேபோல், சென்னை புரசைவாக்கம், பேரிஸ் உள்ளிட்ட இடங்களிலும் விற்பனை மந்தமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி, அமைந்தகரை, அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள பிரபலமான வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், அந்த பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது.
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading