முகப்பு /செய்தி /கொரோனா / கொரோனோ பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் எவை தெரியுமா?

கொரோனோ பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் எவை தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பல மில்லியன் மக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது சாத்தயமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சில முக்கிய விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. சில போட்டிகள் நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளன

2020ம் ஆண்டு ஒரு பிளாக்பஸ்டர் ஆண்டாக கருதப்பட்டது, ஏனெனில் பல விளையாட்டு நிகழ்வுகள் பிளான் செய்து ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக இருந்தன. இருப்பினும், கொரோனா தொற்றுநோய் காரணமாக பல விளையாட்டு போட்டிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன.அத்தகைய முக்கிய விளையாட்டு மற்றும் நிகழ்வுகள் பற்றிய செய்தியை இப்போது காண்போம்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 : 

ஒலிம்பிக் என்பது மிகப்பெரிய விளையாட்டு போட்டிகள் நிறைந்தது. இந்த ஆண்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறவிருந்த ஒலிம்பிக்கில், தொற்றுநோய் காரணமாக 2021க்கு ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது. இந்த நிகழ்வு இப்போது ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8, 2021 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

டி 20 உலகக் கோப்பை 2020 (T20 World Cup 2020) :

தொற்றுநோய் காரணமாக சர்வதேச T20 உலகக் கோப்பையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒத்திவைத்தது. இந்த போட்டி அக்டோபர் 18ம் தேதி தொடங்கி நவம்பர் 15ம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டது. இந்த மாற்றத்தால் ஆஸ்திரேலியா 2020க்கான எடிசனுக்கு பதிலாக 2022ல் போட்டிகளை நடத்தும். இதன் பொருள் இந்தியாவில் ஐ.சி.சி ஆண்கள் டி 20 உலகக் கோப்பை 2021 அசல் அட்டவணைப்படி நடைபெறும்.

கோபா அமெரிக்கா : 

இந்த ஆண்டு கோபா அமெரிக்கா 2021 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு மார்ச் 17 அன்று வெளியிட்டது.

விம்பிள்டன் 2020 : 

ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் யூரோ 2020 ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல் 1ம் தேதி விம்பிள்டன் 2020 போட்டியை ரத்து செய்வதற்கான முடிவை எடுத்தபோது, அனைத்து இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப்பும் இதை பலமாக எதிர்த்தன.

மாரத்தான் போட்டிகள் : 

ஏப்ரல் 26ம் தேதி நடைபெறவிருந்த லண்டன் மாரத்தான் போட்டி அக்டோபர் 4ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல போஷ்டன் மாரத்தான் ஏப்ரல் 4 தேதியிலிருந்து செப்டம்பர் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆம்ஸ்டர்டாம், பாரிஸ் மற்றும் பார்சிலோனா மாரத்தான்களும்  ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் நடைபெறும் முக்கிய மாரத்தான் போட்டி மார்ச் 1ம் தேதியன்று கட்டுப்படுத்தப்பட்ட 200 வீரர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 தடகள போட்டிகள்  : 

இரண்டாம் முறை ஏற்பாடு செய்யப்பட்ட ஒலிம்பிக்ஸ் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற, 2021 உலக தடகள சாம்பியன்ஷிப்புகள்  2022க்கு மாற்றப்பட்டன. உலக தடகள இந்த ஆண்டு 2020 மார்ச் 30 அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. கத்தார், சீனா, ஸ்டாக்ஹோம், நேபிள்ஸ் மற்றும் ரபாத் ஆகியவற்றின் 2020 சீசன் தடகளப் போட்டிகளை டயமண்ட் லீக் அமைப்பு ஒத்திவைத்திருக்கிறது. மார்ச் 13-15ம் தேதிகளில் நாஞ்சிங்கில் நடைபெற விருந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அடுத்த ஆண்டுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஐ.பி.எல் 2020  : 

முதலில் 2020 மார்ச் 29 முதல் தொடங்கவிருந்த இந்தியன் பிரீமியர் லீக் செப்டம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பி.சி.சி.ஐ இந்த போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்குஇடம் மாற்றியது, அங்கு ரசிகர்கள் இன்றி வெற்று மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றன, ஏனெனில் வீரர்களுக்கு 'உயிர் பாதுகாப்பான' குமிழ்கள் உருவாக்கப்பட்டன.

ஐரோப்பிய லீக்ஸ்: 

கொரோனா வைரஸுக்கு ஐரோப்பாவும் தப்பவில்லை. எனவே, அனைத்து பெரிய லீக்குகளும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. ஜெர்மனியின் பன்டெஸ்லிகாவில்  ரசிகர்கள் இன்றி வெற்று அரங்கத்தில் கால்பந்து ஆட்டத்தை தொடங்கியது. அந்நேரத்தில் கொரோனாவிற்க்கான கடுமையான சுகாதார நெறிமுறைகள் காணப்பட்டன. இதன் பின்னர், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் இத்தாலிஆகிய நாடுகளில் உள்ள கால்பந்து லீக்குகளும் உயிர் பாதுகாப்பான குமிழிகளை கொண்டு விளையாட்டுகளைத் தொடங்கின.

யூரோ 2020  : 

மெகா கால்பந்து போட்டி 2020 ஜூன் 12 முதல் ஐரோப்பாவில் 12 நாடுகளில் நடைபெற திட்டமிடப்பட்டது. இப்போட்டி இப்போது ஜூன் 11 முதல் 2021 ஜூலை 11 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கொரோனா பெருந்தொற்று சாதாரண மக்களை மட்டுமல்லாது பலரையும் பாதித்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு பல திட்டமிடல்கள் இருந்த போதிலும் அனைத்தையும் இந்த கோவிட்-19 பலவந்தமாக தடை செய்தது அல்லது தேதி ஒத்தி வைக்க செய்தது. அந்தவகையில் மேற்சொன்ன விளையாட்டுப்போட்டிகள் உலக மக்களால் எப்போதும் கவனிக்க கூடியவை.

First published:

Tags: Corona, Cricket, IPL 2020, YearEnder 2020