ஜனவரியில் கொரோனா இரண்டாம் அலைக்கு வாய்ப்பு - எச்சரிக்கைவிடுக்கும் மகாராஷ்டிரா

ஐரோப்பியா நாடுகளைப் போல கொரோனா இரண்டாவது அலை ஜனவரி மாதத்தில் தாக்கக் கூடும் என்று மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

ஜனவரியில் கொரோனா இரண்டாம் அலைக்கு வாய்ப்பு - எச்சரிக்கைவிடுக்கும் மகாராஷ்டிரா
மாதிரிப் படம்
  • News18 Tamil
  • Last Updated: November 15, 2020, 10:08 AM IST
  • Share this:
இந்தியாவில் மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்துவருகிறது. கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். மேலும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொரோனா பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் கொரோனா பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்தது. ஆனால், தற்போது கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது 45 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.

இருப்பினும், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தாக்கும் என்று ஐ.நா சபை எச்சரித்திருந்தது. இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அக்டோபர் மாதம் முதல், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. எனினும் வைரஸின் இரண்டாவது அலை பல நாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள நாடுகளைத் தாக்கியுள்ளது.


ஐரோப்பாவில் நடப்பதை அடிப்படையாகக் கொண்டு இரண்டாவது அலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனைகளில் எந்தவிதமான மனநிறைவும் அடைய வேண்டாம்.

மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட மற்றும் நகராட்சிகளிலும் கரோனா முடிவு கண்டறியப்படுவதற்கான ஆய்வகங்கள் சரியாகச் செயல்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
First published: November 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading