மகாராஷ்டிராவில் ஒவ்வொரு 5 நாட்களுக்கும் 1000 பேர்...! அதிர்ச்சி அளிக்கும் புள்ளி விபரம்

இந்தியாவில் ஒரேநாளில் 500 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஒவ்வொரு 5 நாட்களுக்கும் 1000 பேர்...! அதிர்ச்சி அளிக்கும் புள்ளி விபரம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 13, 2020, 8:22 PM IST
  • Share this:
மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் ஒவ்வொரு 5 நாட்களுக்கும் ஆயிரம் பேர் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில், 28,701 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 500 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியுள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவின் மொத்த கொரோனா உயிரிழப்பில் 45 விழுக்காடு உயிரிழப்பு, மகாராஷ்டிராவில் மட்டுமே பதிவாகியுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு 10ஆயிரத்தை கடந்துள்ளது. இது சீனா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா உயிரிழப்புகளை விட அதிகமானதாகும்.


மகாராஷ்டிராவில் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, ஜூன் 16 -ம் தேதி ஒரேநாளில் 1329 உயிரிழப்புகள் கணக்கில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5537 ஆக அதிகரித்தது. அதன்பிறகு ஒவ்வொரு 5 நாட்களுக்கும் சுமார் ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகத் தொடங்கின. இதன்மூலம் கடந்த 25 நாட்களில் மட்டுமே 5 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: இன்று அறிமுகமாக இருக்கும் Google-இன் ”சம்திங் ஸ்பெஷல்” என்ன?

படிக்க: ஆறு ஒன்றில் இரு வண்ணங்களில் நீர் ஓடும் ஆச்சர்யம் - வீடியோ
மும்பையில் ஜுன் 16-ம் தேதிக்கு பிறகு மட்டும் 3167 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தானேவில் ஜூன் 16ஆம் தேதிக்கு பிறகு 957 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக டெல்லியில் அதிகளவாக 3371 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. குஜராத்தில் 2045 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் . கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு மருந்துக்கான எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது.

 
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading