மகாராஷ்டிராவில் இன்று இரவு முதல் 15 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவிப்பு..

ஊரடங்கு

மகாராஷ்டிராவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், இன்று இரவு முதல் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

 • Share this:
  மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாநில மக்களுக்கு உரையாற்றிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஒரு நாள் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தெரிவித்தார். மாநிலத்தில் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதாகவும், போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

  அவசரநிலையைப் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அண்டை மாநிலங்களிலிருந்து இந்திய விமானப் படை விமானம் மூலம் ஆக்சிஜனை விநியோகிக்க பிரதமர் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

  வேறு வழியின்றி கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் கூறிய அவர், இன்று இரவு 8 மணிமுதல் மே மாதம் ஒன்றாம் தேதி காலை 7 மணி வரை 15 நாட்களுக்கு, ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாக அறிவித்தார். அலுவலகங்கள் மூடப்படும் என்றும், அத்தியாவசிய சேவைகள் மட்டுமே கிடைக்கும் என்றும் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

  ரயில், பேருந்து சேவைகள் தொடரும் என்றும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அவற்றை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் 12 லட்சம் பேருக்கு தலா 1500 ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

  மேலும் படிக்க... தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி திருவிழா தொடக்கம்...  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: