மார்ச் 15 முதல் 21 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது? முழு விபரம் இங்கே..

மார்ச் 15 முதல் 21 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது? முழு விபரம் இங்கே..

நாக்பூரில் லாக்டவுன்

மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 15-ம் தேதி முதல் நாக்பூரில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

  • Share this:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக வரும் திங்கள் முதல் மார்ச் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

அந்த நகரில் மட்டும் ஒரே நாளில் 1710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து இந்த உத்தரவை அமைச்சர் நிதின்ராவத் பிறப்பித்துள்ளார். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் பால், காய்கறி, பழக்கடைகள், மருத்துவ மையங்கள் மட்டும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாக்பூரில் மால்கள், வாரச்சந்தைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் 9 மணி வரை மட்டுமே இயங்கவும், உணவு டெலிவரிகள் இரவு 10 மணி வரை மட்டுமே அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல தானே மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகம் உள்ள 16 இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.. இந்தியாவில் இந்த ஆண்டின் அதிகபட்ச கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் பதிவு..உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: