Maharashtra : நூறு வயதிலும் கொரோனாவை வீழ்த்தி வீடு திரும்பிய வயதான தம்பதிகள்

கொரோனாவை வீழ்த்தி வீடு திரும்பிய பாட்டன், பாட்டி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதானவர்கள் உயிரிழக்க வாய்ப்பு என கூறுவது வதந்தி என்பதை நிரூபித்திருக்கிறார்கள் நூறு வயதை எட்டிய மகாராஷ்டிரா தம்பதி.

  • Share this:
    மகாராஷ்டிர மாநில பாட்டன் தேனு சவான். இவரது மனைவி மொதாபாய். 105 வயதை எட்டிய இந்த பாட்டனும்,95 வயதை எட்டிய இந்த பாட்டியும் வயல்காட்டிலேயே வேலை செய்து வாழ்ந்து உடலை வலுவாக்கிய இரும்பு மனிதர்கள்.ஊர் ஊராக தெருத் தெருவாக பரவிய கொரோனா இவர்கள் வாழ்ந்த லதூர் அருகே உள்ள கட்கோன் தன்டா கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை.மகன்களோடு கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த இந்த இணை பிரியாத தம்பதிக்கும், 3 பேத்திகளையும் தொற்றிக்கொண்டது கொரோனா.

    மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தரலாம் என மகன் சுரேஷ் சவான் நினைத்தபோது கிராமத்துக்காரர்கள் பயமுறுத்தியுள்ளனர். தள்ளாத வயதில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்தால் மரணம் நிச்சயம் என ஜோசியம் கூறினார்கள். ஆனால் அதை நம்ப மறுத்த இவர்களது மகன் சுரேஷ் சவான், 3 மணி நேர பயணத்தில் லதூர் நகரில் இருந்த அரசு மருத்துவமனையில் தனது தாய், தந்தையை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். வயதானவர்கள் என்பதால் செயற்கை சுவாசத்துடன் அவசர சிகிச்சை பிரிவில் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஒன்று இரண்டல்ல 9 நாட்கள் தேனு சவானும், மொதா பாயும் கொரோனாவோடு அவசர சிகிச்சை பிரிவில் போராடியுள்ளார்கள். தினமும் மருத்துவமனைக்கு வந்து ஜன்னல் வழியாக தங்களை பார்க்கும் மகன் சுரேஷிடம் எப்போது குணமடைவோம், மீண்டும் ஊர் மண்ணைப் பார்ப்போமா என ஏக்கத்தோடு கேட்டிருக்கிறார்கள் இந்த வயதான தம்பதி.

    ALSO READ : எஞ்சாய் எஞ்சாமி பாடலை தனது மழலை குரலில் பாடி அசத்தும் சிறுமி - பாராட்டும் இணையவாசிகள்

    அதற்கு, நாளை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என தினமும் நம்பிக்கை ஊட்டிவிட்டு வீடு திரும்புவாராம் சுரேஷ்.ஒன்பதாம் நாள் இறுதியில் தள்ளாத வயதிலும் தங்களைத் தொற்றிய கொரோனாவை தள்ளிவிட்டுவிட்டு வெற்றி நடைபோட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள் தேனு பாட்டனும், மொதாபாய் பாட்டியும்.

     



     

    உரிய நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதும், தாமதமின்றி சிகிச்சைக்கு அழைத்து வந்ததுமே இந்த வயதிலும் இருவரும் உயிர் பிழைக்க காரணம் என்கிறார்கள் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.வெல்ல முடியாதது கொரோனா தொடர்பான அச்சம்தானே தவிர, கொரோனா அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்கள் இந்த நூறு ஆயுசைத் தாண்டிய கொரோனா வீரர்கள்.

     
    Published by:Sankaravadivoo G
    First published: