பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கொரோனா பரிசோதனை - லேப் டெக்னீசியன் கைது

கொரோனா பரிசோதனை என்று பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்த லேப் டெக்னீசியன் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்

பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கொரோனா பரிசோதனை - லேப் டெக்னீசியன் கைது
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 31, 2020, 3:29 PM IST
  • Share this:
கொரோனா பேரிடருக்கு இடையே, தனிமை முகாமில் இருந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வுகள் சமீபத்தில் அரங்கேறி அதிர வைத்தன. இதேபோல, மஹாராஷ்டிராவில் ஒரு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

மஹாராஷ்டிராவின் அமராவதி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை செய்யும் 24 வயதான பெண், தனது உடன் பணியாற்றும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், தானும் பரிசோதனை செய்ய அங்கு அமைக்கப்பட்டிருந்த கொரோனா அவசர சிகிச்சை மையத்தை அணுகியுள்ளார்.

அங்கிருந்த லேப் டெக்னீசியன், மூக்கு வழியாக சளி மாதிரிகளை எடுத்த பின்னர், பிறப்பு உறுப்பிலும் மாதிரிகள் எடுக்க வேண்டும் எனக் கூற, கொரோனா சோதனை பற்றி தெரியாததால், அந்த பெண்ணும் அதற்கு உடன் பட்டுள்ளார்.


தனக்கு நடந்த பரிசோதனையை பற்றி தனது தோழிகளிடம் அவர் பகிர, அந்த செய்தி, பெண்ணின் சகோதரருக்கு எட்டியது, இதனை அடுத்து அவர் மருத்துவர்களிடம் சென்று விசாரிக்க, கொரோனா பரிசோதனைக்கு மூக்கு அல்லது தொண்டையில் இருந்து மட்டுமே சளி மாதிரிகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இதனை அடுத்து, லேப் டெக்னீசியன் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டது. மேலும், பாலியல் வன்கொடுமை வழக்கில் லேப் டெக்னீசியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading