வெளியே வந்தால் முகக்கவசம் கட்டாயம்... கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்த இந்தியாவின் முதல் மாநிலம்...!

வெளியே வந்தால் முகக்கவசம் கட்டாயம்... கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்த இந்தியாவின் முதல் மாநிலம்...!
மாதிரிப்படம்
  • Share this:
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்ரா உருவெடுத்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது 31 மாநிலங்களில் தடம் பதித்துள்ளது. இதில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

இதன்மூலம் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மாநிலமாக மகாராஷ்ரா உருவெடுத்துள்ளது.  இதன்மூலம் பொருளாதார தலைநகரம், கொரோனா தலைநகரமாக மாறியுள்ளது.


முதன்முதலாக துபாயில் இருந்து மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்துக்கு திரும்பிய தம்பதிக்கு, மார்ச் 9 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மார்ச் 17 ஆம் தேதி மும்பை மருத்துவமனையில் 64 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்தார். இவ்வாறு மகாராஷ்டிராவில் தனது பாதிப்பையும், மரண கணக்கையும் கொரோனா தொடங்கியது.

பாதிப்பு எண்ணிக்கை மார்ச் 25 ஆம் தேதி 122 ஆக இருந்த நிலையில், மார்ச் 31ல் 302 ஆக மாறியது. அடுத்த 4 நாட்களில் அதாவது ஏப்ரல் 4 ஆம் தேதி இது இரட்டிப்பாகி 635 ஆனது. மார்ச் 7 ஆம் தேதி அதிகளவாக ஒரேநாளில் 150 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 1,018ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் வீடுகளை விட்டு வெளியேறும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மாநிலத்தின் நலன் கருதி, மருத்துவ பணியில் அனுபவம் உள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி பெற்று பணிபுரியாமல் உள்ளவர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.Also see...

 

 

 

 

 
First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading