• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • குறையும் கொரோனா: மகாராஷ்டிராவில் 5 நிலைகளாக தளர்வுகள் அறிவிப்பு!

குறையும் கொரோனா: மகாராஷ்டிராவில் 5 நிலைகளாக தளர்வுகள் அறிவிப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கடும்  கட்டுப்பாடுகள் காரணமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. தற்போது தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. மும்பை நகரின் தினசரி பாதிப்பும் ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. 

  • Share this:
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவருவதால் 5 நிலைகளான தளர்வுகளை அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா 2வது அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று.   ஏப்ரல் மாதத்தில் அங்கு தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்து பதிவானது.  ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றால் கொரோனா கட்டுக்கடங்காமல் சென்றது. இதையடுத்து மகாராஷ்டிர அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. முழு ஊரடங்கும் போடப்பட்டது.

இத்தகைய கடும்  கட்டுப்பாடுகள் காரணமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. தற்போது தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. மும்பை நகரின் தினசரி பாதிப்பும் ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.  தற்போது 2 லட்சத்து 16ஆயிரம் பேர் மட்டுமே மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று பரவல் குறைந்து வருவதால் அம்மாநில அரசு ஊரடங்களில் தளர்வுகளை அறிவித்துள்ளது. 5 நிலைகளாக இந்த தளர்வுகள் வகைப்படுத்தப்படுள்ளன.

இதையும் படிங்க.. 12ம் வகுப்பு தேர்வு ரத்து: மதிப்பீட்டில் திருப்தி இல்லையென்றால் தேர்வு எழுதலாம்- சிபிஎஸ்இ

முதல் நிலை:

தொற்று பாதிப்பு சராசரி 5 சதவீதத்துக்கு குறைவாகவும் , ஆக்சிஜன் படுக்கை ஆக்கிரமிப்பு 25 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் முழு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  உணவகம், மால்கள், அங்காடிகள், புறநகர் ரயில்கள், சுற்றுலா இடங்கள்,  திரையரங்கங்கள், திரைப்பட படப்பிடிப்புகள், உடற்பயிற்சி கூடம், சலூன் போன்ற அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அவுரங்காபாத், பண்டாரா, புல்தானா, சந்திரபூர், துலே, கோண்டியா, கட்சிரோலி, ஜல்கான், லாதூர், நாந்தேட், நாசிக், பர்பானி, தானே, ஜல்னா, நாக்பூர், வர்தா, வாஷிம் மற்றும் யவத்மால் ஆகிய நகரங்கள்/ மாவட்டங்கள்  முதல் நிலையில் வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாம் நிலை:

இந்த நிலையில் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். ஜிம், சலூன் போன்றவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . திருமணத்தில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். மும்பை,  அகமத்நகர், அமராவதி, ஹிங்ஹோலி, நந்தூர்பர் ஆகிய நகரங்கள்/ மாவட்டங்கள் இதில் வருகின்றன.

மேலும் படிக்க.. கொரோனாவல் இறந்துவிட்டதாக புதைக்கப்பட்ட மூதாட்டி மீண்டும் வந்த்தால் அதிர்ச்சி..

மூன்றாவது நிலை:

அகோலா, பீட், கோலாப்பூர், உஸ்மானாபாத், ரத்னகிரி, சிந்துதுர்க், சாங்லி, சதாரா, பால்கர் மற்றும் சோலாப்பூர் ஆகிய நகரங்கள்/ மாவட்டங்கள் மூன்றாம் நிலையில் வருகின்றன.

நான்காம் நிலை:

புனே மற்றும் ராய்காட் ஆகியவை இந்த நிலையில் வரும் நகரங்கள்/ மாவட்டங்கள் ஆகும்

ஐந்தாம் நிலை:

ஐந்தாம் நிலையில் உள்ள நகரங்கள்/ மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக  உள்ளதால், பயணங்களுக்கு இ.பாஸ் அவசியமாகும். அதேவேளையில், மாநில அளவிலான பயணங்களுக்கு பிசிஆர் சோதனை முடிவுகள் தேவையில்லை

 


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: