Home /News /coronavirus-latest-news /

கொரோனா தடுப்பூசி ஆய்வுக்காக 30 ரீசஸ் குரங்குகளைப் பிடிக்க அனுமதித்தது மஹாராஷ்ட்ர அரசு

கொரோனா தடுப்பூசி ஆய்வுக்காக 30 ரீசஸ் குரங்குகளைப் பிடிக்க அனுமதித்தது மஹாராஷ்ட்ர அரசு

ரீசஸ் வகைக் குரங்குகள்

ரீசஸ் வகைக் குரங்குகள்

தடுப்பூசிஆராய்ச்சி பயன்படுத்தப்படும் ரீசஸ் வகை குரங்குகளில் 30 குரங்குகளைப் பிடிக்க மஹாராஷ்ட்ர அரசு அனுமதியளித்துள்ளது. 

    புனேவில் இயங்கி வரும் வைராலஜி நேஷனல் இன்ஸ்டிட்யூட்டில் நடந்து வரும்கோவிட்-19 ஆய்வுக்காக,  தடுப்பூசிஆராய்ச்சி பயன்படுத்தப்படும் ரீசஸ் வகை குரங்குகளில் 30 குரங்குகளைப் பிடிக்க மஹாராஷ்ட்ர அரசு அனுமதியளித்துள்ளது. 

    தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் தென்படும் இந்த வகை ரீசஸ் குரங்குகள் அல்லது ”Rhesus Macaques" என்னும் குரங்குகள்தான் மருத்துவ ஆராய்ச்சிக்கு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

    வைராலஜி ஆய்வு நிறுவனம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்போகும் குரங்குகள் 4 முதல் 5 வயதுக்குள்ளானதாக இருக்கும் என்று வனத்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

    அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் இந்த குரங்குகள் பிடிக்கப்பட வேண்டும் என்றும், குரங்குகளுக்கு காயங்கள் ஏற்படாமல் பிடிக்க வேண்டும் என்றும், வேறு எந்த விதமான வணிக நோக்கங்களுக்காகவும் இந்தக் குரங்குகள் பயன்படுத்தப்பட்டுவிடக்கூடாது என்னும் நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மேலும் பார்க்க..

    கோரக்நாத் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Gunavathy
    First published:

    அடுத்த செய்தி