• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தீயாய் பரவும் கொரோனா - சீனாவை விஞ்சிய மகாராஷ்டிரா

தீயாய் பரவும் கொரோனா - சீனாவை விஞ்சிய மகாராஷ்டிரா

இந்த போக்கு உலகளாவியது, ஒரு சில விதிவிலக்குகளை குறிப்பாக உயிரியல் வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆய்வின் ஆசிரியர்கள் "உள்ளார்ந்த மற்றும் தகவமைப்பு நோயெதிர்ப்பு அமைப்பு இரண்டிலும் பாலியல் வேறுபாடுகள் முன்னர் தெரிவிக்கப்பட்டன, மேலும் கோவிட் -19ல் பெண்களின் நன்மைக்கு இது காரணமாக இருக்கலாம் " என்று தெரிவித்தனர். பெண்கள் இயற்கையாகவே அதிக வகை I இன்டர்ஃபெரான் புரதங்களை (Type I interferon proteins) உற்பத்தி செய்கிறார்கள். இது சைட்டோகைன் புயல் (Cytokine Storm) எனப்படும் அசாதாரண நோயெதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்துகிறது.

இந்த போக்கு உலகளாவியது, ஒரு சில விதிவிலக்குகளை குறிப்பாக உயிரியல் வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆய்வின் ஆசிரியர்கள் "உள்ளார்ந்த மற்றும் தகவமைப்பு நோயெதிர்ப்பு அமைப்பு இரண்டிலும் பாலியல் வேறுபாடுகள் முன்னர் தெரிவிக்கப்பட்டன, மேலும் கோவிட் -19ல் பெண்களின் நன்மைக்கு இது காரணமாக இருக்கலாம் " என்று தெரிவித்தனர். பெண்கள் இயற்கையாகவே அதிக வகை I இன்டர்ஃபெரான் புரதங்களை (Type I interferon proteins) உற்பத்தி செய்கிறார்கள். இது சைட்டோகைன் புயல் (Cytokine Storm) எனப்படும் அசாதாரண நோயெதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்துகிறது.

மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,000 கடந்துள்ளது. இதன்மூலம் கொரோனா முதல்முதலில் வெளிப்பட்ட சீனாவின் மொத்த பாதிப்பை, மகாராஷ்டிரா விஞ்சியுள்ளது.

  • Share this:
    மகாராஷ்டிராவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 3007 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 85,975 ஆக அதிகரித்துள்ளது.

    இதன்மூலம் சீனாவின் பாதிப்பு எண்ணிக்கையை மகாராஷ்டிரா விஞ்சியுள்ளது.  உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்துள்ளது. மும்பையில் மட்டுமே 48,774 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், 1,638 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    அதாவது மகாராஷ்டிராவின் 57 விழுக்காடு பாதிப்புகள் மும்பையில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. மும்பையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தாராவி பகுதியில் 1899 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

    தாராவியில் 71 உயிரிழப்புகள் பதிவான நிலையில், கடந்த 6 நாட்களாக கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக தானே மாவட்டத்தில் பாதிப்பு 13ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    மகாராஷ்டிராவின் முதல் கொரோனா தொற்று மார்ச் 9 ஆம் தேதி புனே மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, மகாராஷ்டிராவின் பாதிப்பு 122 என்ற அளவிலேயே இருந்தது. மார்ச் 31 ஆம் தேதி, அதாவது ஒருவாரத்தில் பாதிப்பு 300ஐ கடந்தது.

    ஏப்ரல் முதல்வாரத்திலேயே 1000 பாதிப்புகளை கடந்த மகாராஷ்டிராவில், ஏப்ரல் 30 ஆம் தேதி 10 ஆயிரத்து 498 ஆக பாதிப்பு அதிகரித்தது. அதாவது ஏப்ரல் மாதத்தில் மட்டுமே 10,000 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன.

    மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 6 மடங்கை விட அதிகரித்தது. மே 31 ஆம் தேதி அன்று, மகாராஷ்டிராவின் மொத்த பாதிப்பு 67,655 ஆக காணப்பட்டது. இதுவே ஜூன் முதல் 7 நாட்களில் 17,000 அதிகமான புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டு, 85,975 ஆக அதிகரித்துள்ளது.

    மே ஒன்றாம் தேதி முதல் முதலாக ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. இது படிப்படியாக அதிகரித்து மே மாத இறுதியில் ஒரே நாளில் 2,500 பேர் பாதிப்பு என்ற நிலையை அடைந்தது.

    ஜூன் 7 ஆம் தேதி இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. எனினும் வரும் நாட்களில் தொற்றின் வேகம் குறையும் என மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Also read... யார் டெல்லிவாசிகள்? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ப.சிதம்பரம் கேள்வி






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: