• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • 3,000 காவல்துறையினருக்கு கொரோனா; 30 பேர் உயிரிழப்பு - மஹாராஷ்டிரா அரசு

3,000 காவல்துறையினருக்கு கொரோனா; 30 பேர் உயிரிழப்பு - மஹாராஷ்டிரா அரசு

சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என மத்திய அரசு கூறி வரும் நிலையில் இந்திய மருத்துவ சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என மத்திய அரசு கூறி வரும் நிலையில் இந்திய மருத்துவ சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் இதுவரை சுமார் 3,000 காவல்துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 30 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

  • Share this:
    மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆயிரத்துக்கு மேல் உள்ளது; உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரமாக உள்ளது.

    இந்நிலையில், இதுவரை ஏறக்குறைய 3,000 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் முன்னணியில் நிற்பதால் இவ்வாறு எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக் கூறிய தேஷ்முக், 50 முதல் 55 வயது வரை இருக்கும் 23,000 காவல்துறை அதிகாரிகளுக்கு ஓரளவு பாதுகாப்பான இடங்களில் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 55 வயதைக் கடந்த 12,000 அதிகாரிகள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வீட்டில் இருப்பவர்களுக்கான மாதச் சம்பளத்தை அப்படியே வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு “ஒரு பைசா கூட” செலவளிக்கவில்லை என்று மத்திய அரசை அவர் குற்றம் சாட்டினார். சிறைவாசிகள் பற்றி கூறுகையில், 9,671 பேருக்கு இதுவரை தற்காலிகப் பிணை வழங்கப்பட்டுள்ளது என்றும், 24 மாவட்டங்களில் புதிய சிறைக் கைதிகளை வைப்பதற்காக 31 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.





    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: