பிரபல இந்தி நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு

சதீஷ் கவுல்

மகாபாரத நாடக தொடரில் நடித்த பிரபல நடிகர் சதீஷ் கவுல் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. இதுவரையில் இல்லாத புதிய உச்சமாக ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.30 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

  பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகர் சதீஷ் கவுல் இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புகழ்பெற்ற மகாபாரத கதைத் தொடரில் இந்திரன் கதாபாரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் லுதியானாவில் உள்ள மருத்துவமனையில் சதீஷ்கவுல் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: