மதுரையில் ஊரடங்கு - அண்டை மாவட்ட எல்லைகளில் குவியும் குடிமகன்களால் விற்றுத்தீர்ந்த மதுபானங்கள்

10. இரு நபர்களுக்கு இடையில் சமூக இடைவெளி குறைந்தது 3 அடி இருக்க வேண்டும்.

மதுரை ஊரடங்கு காரணமாக மதுபானம் வாங்குவதற்கு மூன்றாவது நாளாக அண்டை மாவட்ட எல்லைகளில் குடிமகன்கள் குவிந்து வருகின்றனர்.

  • Share this:
மதுரையில் தீவிர ஊரடங்கு கடந்த ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப் பட்டுள்ள நிலையில் அண்டை மாவட்டமான சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கடந்த இரண்டு நாட்களாக குவிந்து வருகின்றனர்.

சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் முண்டியடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் மதுபானங்களை வாங்க ஆர்வம் காட்டி வருவதால் கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது நாளான இன்றும் குடிமகன்கள் வழக்கம் போல காலை 10 மணிக்கு கடை திறந்ததும் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனால் மிகச் சொற்ப அளவிலே விற்பனையாகும் எல்லை டாஸ்மாக் கடைகளில் கடந்த மூன்று நாட்களில் மதுபானங்கள் ஒட்டுமொத்தமாக விற்று தீர்ந்தன.

மேலும் படிக்க...

ஒரே வாரத்தில் இருமடங்கான தக்காளி விலை: மகிழ்ச்சியில் தருமபுரி விவசாயிகள்..

குடிமகன்கள் பெரும்பாலானோர் 150 ரூபாய்க்கு உட்பட்ட மதுபானங்களை விரும்பி வாங்குவது வழக்கம். அவை அனைத்தும் விற்று தீர்ந்ததால் தற்போது 200 ரூபாய்க்கு மேல் உள்ள மதுபானங்கள் மட்டுமே விற்கப்பட்டு வருகிறது. நேற்று சமூக இடைவெளி பின்பற்றாமல் சர்ச்சையில் சிக்கிய பனையூர் விலக்கு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் இன்றும் நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர்.

மிகக் குறைந்த அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும்  முக கவசம்  அணியாமலும் பெரும்பாலானோர் மதுபானங்களை வாங்கி சென்றனர். மதுரையிலிருந்து வரும் குடிமகன்களை கட்டுப்படுத்த மதுரை காவல்துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் தவறிவிட்டனர்.
Published by:Vaijayanthi S
First published: