Home /News /coronavirus-latest-news /

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் ஊரடங்கால் மேலும் தாமதமாகலாம் என தகவல்...!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் ஊரடங்கால் மேலும் தாமதமாகலாம் என தகவல்...!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம்

4 ஆண்டுகளுக்குள் மருத்துவமனை அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள், ஊரடங்கு காரணமாக மேலும் தாமதமாகலாம் என அச்சம் எழுந்துள்ளது.

    மதுரை தோப்பூரில் 1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 224.24 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று, 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நவம்பர் மாதம் தொடங்கியது.

    இந்நிலையில் ஊரடங்கு காரணமாக இந்த பணி, மார்ச் 24ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. கட்டுமான பணிக்கு மத்திய அரசு விலக்கு அளித்தும் மாநில அரசு அனுமதிக்கவில்லை. எனவே சுற்றுச்சுவர் கட்டுமான பணிக்கு உடனடியாக அனுமதி தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    அதேபோன்று தடை பட்டு நிற்கும், சாலை பணியையும் தொடங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. 4 ஆண்டுகளுக்குள் மருத்துவமனை அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. செப்டம்பர் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டட பணிகள் தொடங்கப்படும் என அண்மையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் ஊரடங்கால் மேலும் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Aiims Madurai, CoronaVirus

    அடுத்த செய்தி