கொரோனா பாதிக்கப்பட்ட தெருக்களை அடைக்க நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் உத்தரவு

மாதிரி படம்

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ள பகுதிகளை அடைக்க் மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உள்ளது.

 • Share this:
  மதுரை மாநகராட்சி பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது, இதனை ஒட்டி தோற்று பரவல் கட்டுப்படுத்த மதுரையில் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது,

  இதில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வார்டுகள் பரிசோதனை முகாம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ள பகுதிகளில் முன்பு பின்பற்றப்படும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள் படி அப்பகுதியே அடைத்து மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல் கபசுர குடிநீர் வழங்குதல் திட்டமிட்டுள்ளனர்,

  பொது மக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் அவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும், மாநகராட்சியின் 31 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளனர்,

  காய்ச்சல் தொடர்பான சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மாநகராட்சி அழைப்பு மைய 842 842 5000 என்ற எண்கள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: