11,12 பொதுத்தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க நீதிமன்றம் அறிவுறுத்தல்!

11,12 பொதுத்தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க நீதிமன்றம் அறிவுறுத்தல்!
(கோப்புப் படம்)
  • Share this:
11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க போதுமான அளவு கிருமி நாசினி மற்றும் முகக் கவசம் இருப்பை உறுதி செய்யக்கோரி, வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில், கிருமி நாசினி மற்றும் முகக் கவசம் அதிக விலைக்கு விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


கொரோனாவால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு போதுமான அளவு முழு கவச உடைகள் இருப்பு உள்ளதாகவும், மேலும், உரிமம் பெற்ற உற்பத்தியாளர்கள் தேவைக்கு ஏற்ப முகக் கவசங்களை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன என்று உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

இருந்த போதும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எஞ்சிய தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தொடரும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்பு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.Also see...
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading