தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பாராட்டிய மத்திய பிரதேச அமைச்சர்

விஸ்வாஸ் கைலாஷ் சாரங்

தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ளது என்றார் மத்தியபிரதேச மருத்துக்கல்வி துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங்.

  • Share this:
சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துடன் மத்தியபிரதேச மருத்துக்கல்வி துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் சந்தித்து, தமிழகத்தில் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகள் குறித்தும் இரு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் நிலை குறித்து மத்திய பிரதேச மருத்துவக்கல்வி துறை அமைச்சர் விஸ்வாஷ் கைலாஷ் சாரங் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையை சுற்றி பார்த்து, தமிழ்நாடு மருத்துவமனை கட்டமைப்பை மத்திய பிரதேச மருத்துவக்கல்வி துறை அமைச்சர் பார்வையிட செல்கிறார்.

இதுவரை 1,83,56,631 தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு 17 லட்சம் வந்துள்ளது. நேற்று கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டோம். தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம்.
தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி  செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறிய அவர், இந்தியாவிலேயே முதன்முறையாக சி.எஸ்.ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது என்றார்.



தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் 2 கோடியை நெருங்கி கொண்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகள், தன்னார்வலர்கள் ஒன்றிணைவதால் கூடுதல் தடுப்பூசிகள் செலுத்த முடியும். தமிழகத்திற்கு 12கோடி தடுப்பூசிகள் தேவை. 2கோடி தடுப்பூசி வரை தற்பொழுது வந்துள்ளது. இன்னும் 10கோடி தடுப்பூசிகள் தேவை.
கடந்த ஆட்சியில் தடுப்பூசி கேட்பதிலும், பொதுமக்களுக்கு செலுத்துவதிலும் சுனக்கம் இருந்தது என கூறிய அவர், 1 கோடி கூடுதல் தடுப்பூசிகள் சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்திருந்தார். அது தொடர்பாக எதுவும் இதுவரை தெரியப்படுத்தவில்லை.

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது உண்மை. மருத்துவ துறையில் ஒப்பந்தம் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் 30 ஆயிரம் நபர்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அவர், கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு ஒப்பந்தம் அடிப்படையில் பணியில் உள்ளவர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றார்.

Must Read : டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்வி... ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது - மத்திய அமைச்சர் விளக்கம்

நேரடியாக நியமனங்கள் மட்டுமே தற்போது நடந்து வருகிறது என்றும், ஒப்பந்த பணியாளர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய  மத்திய பிரதேச அமைச்சர், “மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 70 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொண்டதில், 12 நபர்களுக்கு மட்டுமே நேற்று தொற்று உறுதியானது. தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ளது என்றார்.
Published by:Suresh V
First published: