Covid Vaccination : தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே மணமக்கள் திருமணம் செய்யலாம்: மத்திய பிரதேசத்தில் புது உத்தரவு!

மாதிரி படம்

திருமணத்திற்கு அனுமதி கோரும் மணமக்கள் காட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று மத்திய பிரதேச மாநிலம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • Share this:
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதை அடுத்து அம்மாநில அரசு ஊரடங்கு விதிகளை தளர்த்தியது. அதன்படி மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த அனுமதியும் வழங்கியது.

இதையடுத்து பலகாட் நகரத்தின் வாரசோனி டவுன் நிர்வாகம் ஒரு புது உத்தரவை விதிர்த்துள்ளது. அதாவது, அப்பகுதியில் திருமணத்திற்கு அனுமதி கோரும் மணமக்கள் காட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் சந்தீப் சிங் பிறப்பித்த இந்த உத்தரவில், திருமணத்திற்கு அனுமதி பெற ஐந்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மணமகன் மற்றும் மணமகள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஆகியோரின் தடுப்பூசி சான்றிதழ்கள் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை அப்பகுதி குடியிருப்பாளர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

ALSO READ | இந்தியாவில் பரவும் உருமாறிய கொரோனாவின் ஒரேயொரு வகைதான் அச்சுறுத்தல்: உலகச் சுகாதார அமைப்பு தகவல்

மேலும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்பகுதி நிர்வாகம் வெளியிட்ட இந்த உத்தரவின் பின்னணி காரணம் மக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிப்பதே ஆகும். மே 31ம் தேதி அன்று, மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஜூன் 15 ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அறிவித்தார். மேலும் ஜூன் 1ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளும் நடைமுறைக்கு வருவதாக தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் மூன்றாவது அலைகளைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை காட்டாயம் கடைப்பிடிக்கும்படி அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். இது குறித்து மாநில மக்களுடன் உரையாற்றிய அவர், "ஊரடங்கு ஜூன் 15 வரை நடைமுறையில் இருக்கும். கொரோனா ஊரடங்கு உத்தரவை நீக்கும் எண்ணம் இல்லை. ஆனால் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு சில விஷயங்களை நகர்த்துவதற்கு நாங்கள் சில தளர்வுகளை வழங்குகிறோம்" என்று கூறினார். இதுதவிர, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை மத்தியப் பிரதேசம் முழு ஊரடங்கின் கீழ் இருக்கும்.

ALSO READ | சென்னையில் கொரோனா தொற்று விகிதம் 10 விழுக்காடாக குறைந்தது!

மீதமுள்ள நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது மற்றும் மீட்பு விகிதம் 96 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.

கடந்த வாரம் வரை, மத்திய பிரதேசத்தில் உள்ள சில மாவட்டங்களில் ரகசியமாக நடத்தப்படும் திருமணங்களை தடுத்து நிறுத்த கடுமையாக விதிமுறைகளை என அறிவிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தன. மேலும் ஊரடங்கு விதிகளை மீறி திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு திருமண சான்றிதழ்கள் வழங்கப்படாது என்று உத்தரவிட்டிருந்தது.

ALSO READ |  இந்தியாவில் கொரோனா தினசரி உயிரிழப்பு மூன்றாயிரத்துக்கும் கீழ் குறைந்தது

குறுகிய காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாகபரவியதை அடுத்து, சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான மாநில அரசு மே மாதத்தில் திருமணம் நடத்த தடை விதித்திருந்தது. ஆனால் திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அவ்வாறு கடந்த மே மாதத்தில் தடையை மீறி திருமணம் நடத்தியதற்காக குறைந்தது 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published: