கொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்!

  • Share this:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த போது ‘வானே இடிந்ததம்மா’ என்ற பாடலை எழுதிய கவிஞர் அஸ்மின் தற்போது கொரோனாவுக்காக பாடல் எழுதியுள்ளார்.

'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற தப்பெல்லாம் தப்பேயில்லை என்ற பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாடலாசிரியர் அஸ்மின். இவர் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது எழுதிய ‘வானே இடிந்ததம்மா’ என்ற இரங்கல் பாடல் உலகமெங்கும் வைரலானது. இந்தப் பாடலுக்கு சதீஷ் வர்சன் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் சதீஷ் வர்சன் - அஸ்மின் இணைந்து கொரோனா வைரஸுக்காக புதிய பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ‘நாளை உனக்கொரு காலம் வரும்’ என்று தொடங்கும் இந்தப் பாடலை சதீஷ் வர்சன் இசையமைத்து பாடியுள்ளார்.


சதீஷ் வர்சன் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய புறம்போக்கு படத்தின் இசையமைப்பாளர் என்பதோடு உலக அளவில் புகழ்பெற்ற இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்காக பாடல் உருவாக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, கொரோனா என்ற டைட்டில் திரைப்படத்துக்காக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: லாரன்ஸுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்!
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்