கொரோனாவுக்கு எதிராக இது நீண்ட போராக இருக்கும்; நாம் சோர்ந்துவிடக் கூடாது - பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிராக இது நீண்ட போராக இருக்கும்; நாம் சோர்ந்துவிடக் கூடாது - பிரதமர் மோடி

உடல்நலக்குறைவால் காலமான சேஷாத்ரியின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மக்கள் ஊரடங்காக இருந்தாலும் சரி, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் உறுதியாக நிற்கிறோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

  பாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்களிடம் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

  கொரோனாவுக்கு எதிராக இந்தியா, சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் வழங்கும் ஆதரவும் பாராட்டும் வகையில் உள்ளது.

  மக்கள் ஊரடங்காக இருந்தாலும் சரி, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் உறுதியாக நிற்கிறோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் 130 கோடி மக்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த நாட்டு மக்கள் இத்தகைய ஒழுக்கத்தைக் வெளிப்படுத்துவார்கள் என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.

  நேற்று இரவு நாட்டு மக்கள் காட்டிய ஒற்றுமை உணர்வை பார்த்தோம். கொரோனா வைரஸின் இருளை எதிர்த்துப் போராட கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை எண்ணற்ற விளக்குகள் ஏற்றப்பட்டன. 130 கோடி இந்தியர்கள் மேற்கொண்ட இந்த பெரிய நடவடிக்கைகள், எங்களை நீண்ட போருக்கு தயார்படுத்தியுள்ளன. கொரோனாவுக்கு எதிராக இது நீண்ட போராக இருக்கும். அதற்காக நாம் சோர்ந்துபோய்விடக் கூடாது.


  இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published: