மூன்று வாரங்களில் குறையும் நோய் எதிர்ப்பு சக்தி: கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களை திரும்ப தாக்கும் வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி, 3 வாரங்கள் மட்டுமே இருக்கும் என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஆய்வில் தெரியவந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் நோய் தாக்குதலுக்கு ஆளாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வாரங்களில் குறையும் நோய் எதிர்ப்பு சக்தி: கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களை திரும்ப தாக்கும் வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா தொற்றுக்கு ஒரு முறை ஆளாகி நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு விட்டால், மீண்டும் வைரஸ் தாக்காது என எண்ணிக்கொண்டிருந்த நிலையில் இடியாய் இறங்கியிருக்கிறது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஆய்வு தகவல்கள். கொரோனா தாக்குதலுக்கு ஆளான 90 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், குணமடைந்த 3 வாரங்கள் வரை மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்ச திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன்பிறகு நோய் எதிர்ப்பு சக்தி மிக வேகமாக குறைந்து வந்திருக்கிறது.

60 சதவீத நோயாளிகளுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தபோதிலும், 17 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே 3 மாதங்களுக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி நீடித்தது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. குணமடைந்ததாக கருதப்பட்ட ஏராளமானோருக்கு 3 மாத காலத்திற்குள்ளாகவே நோய் எதிர்ப்பு சக்தி 23 மடங்கு குறைந்துவிட்டது.

சிலர் முற்றிலுமாக நோய் எதிர்ப்பு சக்தியை இழந்திருக்கின்றனர். இதன்மூலம், நோய் தொற்றுக்கு ஆளாகி, அதிலிருந்து விடுபட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


herd immunity எனப்படும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியினால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முறைக்கு, கிங்ஸ் கல்லூரியின் சோதனை முடிவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

இரண்டு முகக் கவசங்கள்: கார் இருக்கைகளுக்கு நடுவே பிளாஸ்டிக் கவர் - அமைச்சர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள்கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க பிரிட்டன் மற்றும் இத்தாலி நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் நோய் பாதிப்புக்கு ஆளாகி குணமடைவதே மந்தை நோய் எதிர்ப்பு சக்தி எனப்படும்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading