முகப்பு /செய்தி /கொரோனா / Lok Sabha Speaker Om Birla | மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று.... டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மையத்தில் அனுமதி..

Lok Sabha Speaker Om Birla | மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று.... டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மையத்தில் அனுமதி..

ஓம் பிர்லா

ஓம் பிர்லா

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 40,000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி மீண்டும் தற்போது பிரபலங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவுகிறது. அந்த வகையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா என்ற தகவல் மக்களவையில் உறுப்பினர் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...  கொரோனா தடுப்பு மருந்துகள் எவ்வளவு நாள் பாதுகாப்பு வழங்கும் ? எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா விளக்கம்

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: CoronaVirus, Lok sabha, Om Birla