லாக் டவுன் மட்டுமே தீர்வல்ல, தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியுங்கள் - WHO எமெர்ஜென்சி நிபுணர்

மைக்கேல் ரியான்

சரியான விழிப்புணர்வு விதிகளைப் பின்பற்றாவிட்டால், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும். பொது சுகாதார விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமானது என்று தெரிவித்துள்ளார்.

 • Share this:
  அரசுகள் லாக் டவுன் அறிவிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், தொற்று ஏற்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்துவதுடன், அவர்களுடன் தொடர்பில் வந்தவர்களையும் தனிமைப்படுத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை நிபுணரான மைக்கேல் ரியான்.

  ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் எமர்ஜென்சி நிபுணரான மைக்கேல் ரியான், “கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு வெறும் லாக் டவுன்களை அமல்படுத்துவது மட்டுமே தீர்வல்ல. தொற்று நோய் ஏற்பட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதுதான் இதற்கு தீர்வாக இருக்க முடியும்.

  ஒரு பெரிய ஆபத்தில் இருக்கிறோம். சரியான விழிப்புணர்வு விதிகளைப் பின்பற்றாவிட்டால், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும். பொது சுகாதார விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமானது என்று தெரிவித்துள்ளார்.

  https://tamil.news18.com/news/national/indian-medical-council-research-speaks-on-the-corona-seriousness-and-the-level-of-suffering-mg-270963.html
  Published by:Gunavathy
  First published: