டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

நிலைமை கட்டுக்குள் இருப்பதால் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
  • Share this:
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டம் இல்லை என்றும், ஊரடங்கு தொடர்வது அவசியம் என்றும் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 186 பேரும், எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தவர்கள் என்றார். டெல்லியில் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வருவதாகவும், எனினும் நிலைமை கட்டுக்குள் இருப்பதால் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், அரசின் உணவு விநியோக மையத்தில் பணியாற்றியவர் என்பதால், அந்த மையத்துக்கு வந்த அனைவருக்கும் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கெஜ்ரிவால் கூறினார்.


Also see:
First published: April 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading