குறிப்பிட்ட வணிக நடவடிக்கைகளுக்கு அனுமதி - மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

உத்தவ் தாக்கரே

வெளிமாநில தொழிலாளர்கள் கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு, பாதுகாப்பாக அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

 • Share this:
  மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பிட்ட சில வணிக நடவடிக்கைகளை திங்கட்கிழமை முதல் தொடங்க உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

  காணொலி காட்சி மூலம் மாநில மக்களிடம் பேசிய அவர், மத்திய அரசுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், வரும் நாட்களில் படிப்படியாக பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு, பாதுகாப்பாக அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்ரா உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Also see:
  Published by:Rizwan
  First published: