முகப்பு /செய்தி /கொரோனா / தமிழகத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பக்கோரி வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்..!

தமிழகத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பக்கோரி வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்..!

கிண்டியில் போராட்டம் நடத்திய வட மாநிலத்தவர்கள்

கிண்டியில் போராட்டம் நடத்திய வட மாநிலத்தவர்கள்

nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யமாறும் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சொந்த ஊர்களுக்கு அனுப்பக்கோரி தமிழகத்தின் சில இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை அருகே வேங்கைவாசலில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில், வட மாநிலங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கையில் இருந்த பணமும், கட்டுமான நிறுவனம் கொடுத்த அத்தியாவசிய பொருட்களும் தீர்ந்துவிட்ட நிலையில், மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, தங்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டத்தைக் கைவிட்டனர்.

கோவை சிவானந்தா காலனியிலும் வடமாநிலங்களைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி சார்பில் கொடுத்த உணவை வாங்க மறுத்த அவர்கள், உணவு வேண்டாம், ஊருக்கு அனுப்புங்கள் என முழக்கமிட்டனர்.

இந்நிலையில், சொந்த ஊர் செல்ல பதிவு செய்வதற்காக திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் பள்ளியில் ஆதார் அட்டைகளுடன் வடமாநில தொழிலாளர்கள் குவிந்தனர். வெளிமாநில தொழிலாளர்களை அவர்களின் மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக, பிச்சிப்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் ஜெய்வாபாய் பள்ளிகளில் நேற்று முதல் நேரடிப் பதிவு தொடங்கியது.

Also read: 25 கோடி ரூபாய் மதிப்பிலான செங்கல்கள் மண்ணாகக் கரையும் அபாயம்..!

ஜெய்வாபாய் பள்ளியில் கூட்டம் அதிகரித்ததால் QR கோட் மூலம் பதிவு செய்யப்படுகிறது. nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யமாறும் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் தங்களை சொந்த ஊருக்கு அனுப்புவதில் மெத்தனம் காட்டப்படுவதாக தொழிலாளர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக தமிழக அரசு அறிவித்த இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள், எப்போது ரயில் விடப்படும் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இணையதளம் மூலம் விண்ணப்பித்தபோது 5ம் தேதி ரயிலில் பயணிக்கலாம் என குறுஞ்செய்தி வந்ததாகவும், ஆனால் ரயில்கள் இல்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக ரயில்வே துறையினரை கேட்டபொழுது, தமிழக அரசிடமிருந்து கோரிக்கை வரவில்லை என்று பதில் அளித்துள்ளனர். இதனிடையே, சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக ரயில்வே துறையுடன் பேசி வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாநிலத்திற்கு ரயில் விடப்படும், எத்தனை ரயில் என்ற முழுவிவரம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. குறிப்பாக அந்தந்த மாநில அரசு ஏற்றுக் கொண்ட பின்பு சிறப்பு ரயில் இறுதி செய்யப்படும்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: Labor Protest, Lockdown, Migrant workers, Tamilnadu