பழைய இ-பாஸ் செல்லாது - சென்னை காவல் ஆணையர் விளக்கம்

Chennai LockDown | அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்வோர் புதிதாக இ-பாஸ் வாங்க வேண்டும் என்றும், பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

பழைய இ-பாஸ் செல்லாது - சென்னை காவல் ஆணையர் விளக்கம்
ஏ.கே விஸ்வநாதன்
  • News18
  • Last Updated: June 18, 2020, 10:17 PM IST
  • Share this:
கொரோனா தொற்றால் உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், காவல்துறையில் இதுவரை 788 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்படும் என்றும், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும், மருத்துவத் தேவைக்கு தவிர, இதர தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்த அவர், அனுமதிக்கப்பட்ட பணிகளுக்குச் செல்வோர் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

படிக்கஊர் பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணை வாபஸ்

படிக்கஇந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், மளிகை மற்றும் காய்கறி வியாபாரிகள் நேரக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் விஸ்வநாதன் வலியுறுத்தினார்.
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading