முகப்பு /செய்தி /கொரோனா / உணவளியுங்கள் அல்லது சொந்த மாநிலத்திற்கு அனுப்புங்கள்...! மும்பையில் திரண்ட நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள்

உணவளியுங்கள் அல்லது சொந்த மாநிலத்திற்கு அனுப்புங்கள்...! மும்பையில் திரண்ட நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள்

மும்பையில் போராடும் தொழிலாளர்கள்.

மும்பையில் போராடும் தொழிலாளர்கள்.

”உணவளியுங்கள், இல்லையெனில் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யுங்கள் என அவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்”

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மும்பை பாந்த்ராவில் நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் சூழலில், மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை பாந்த்ராவில் நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முகக்கவசங்கள், தனி மனித இடைவெளி என எதையும் கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக ஒரே இடத்தில் குவிந்தனர்.

நாட்டிலேயே மகாராஷ்ட்ராவில்தான் கொரோனா தொற்று அதிகம் பதிவாகியுள்ள நிலையில், அங்கு மக்கள் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது. உணவளியுங்கள், இல்லையெனில் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யுங்கள் என அவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.

ஊரடங்கு நீட்டிப்பால் வருமானமின்றி தவிப்பதாகவும் அந்த தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் சிறிது நேரம் போலீசாரும் அதிகாரிகளும் திணறிப்போயினர். பின்னர், போராட்டக்காரர்களை விரட்ட தடியடியும் நடத்தப்பட்டது.

Also see:

First published:

Tags: CoronaVirus, Labor Protest, Lockdown, Mumbai