Home /News /coronavirus-latest-news /

சீனாவில் மீண்டும் லாக்டவுன்! இந்தியாவில் எந்தெந்த துறைகள் பாதிக்கப்படலாம்?

சீனாவில் மீண்டும் லாக்டவுன்! இந்தியாவில் எந்தெந்த துறைகள் பாதிக்கப்படலாம்?

காட்சி படம்

காட்சி படம்

கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பெரிய எண்ணிக்கையிலான கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்புகளை சந்தித்து வரும் சீனா மீண்டும் லாக்டவுனை அறிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பெரிய எண்ணிக்கையிலான கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்புகளை சந்தித்து வரும் சீனா மீண்டும் லாக்டவுனை அறிவித்துள்ள நிலையில், ஆப்பிள் சப்ளையர் ஃபாக்ஸ்கான், வாகன உற்பத்தியாளர்களான டொயோட்டா மற்றும் வோக்ஸ்வாகன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சீனாவில் சில செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன.

சீனாவில் 2021-இல் பதிவு செய்யப்பட்டதை விட அதிகமான தொற்றுநோய் பரவல் இந்த ஆண்டு பதிவாகி உள்ளது. தொற்று நோயை விரைவில் ஒடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் பல சீன மாகாணங்கள் மற்றும் நகரங்களில் பெய்ஜிங்கின் 'ஸீரோ-டாலரான்ஸ்' இலக்கிற்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் தெற்கு சீனாவின் தொழில்நுட்ப மையமான ஷென்செனுக்கும் பொருந்தும்.

ஷென்சென் - சீனாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த வாரம் டஜன் கணக்கான புதிய தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்பட்ட பின் வெகுஜன சோதனைகள் முடக்கிவிடப்பட்டுள்ளது. ஆகையால் ஷென்செனில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முடிந்தவரை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படியும் மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

ஷென்செனில் உள்ள ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்தின் செயல்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் இடையூறுகளை சமாளிக்க பேக்கப் பிளான்ட்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

also read : ஆப்கனில் பெண்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தடை விதித்த தாலிபான்கள்

மேலும் இரண்டு தைவானிய நிறுவனங்களும், ஷென்செனில் தத்தம் நிறுவனங்களின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டதை உறுதி செய்துள்ளன. அவைகள் - சிப் சப்ஸ்ட்ரேட் மற்றும் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளை தயாரித்து ஆப்பிள் மற்றும் இன்டெலுக்கு சப்ளை செய்யும் நிறுவனமான யுனிமிக்ரான் டெக்னாலஜி கார்ப் மற்றும் ஃப்ளெக்ஸிபிள் ப்ரிண்டட் சர்க்யூட் போர்டு தயாரிப்பாளர் ஆன சன்ஃப்ளெக்ஸ் டெக்னாலஜி கோ லிமிடெட்டும் ஆகும்.

சீனாவின் மற்ற நகரங்களிலும் பல்வேறு அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு ஜிலின் மாகாணத்தின் தலைநகரான சாங்சுன் நகரில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷாங்காயின் 'பைனான்ஷியல் ஹப்'பில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் டோங்குவானின் 'மேனுஃபேக்சரிங் சென்டரில்' பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் எஃப்ஏடபுள்யூ (FAW) குழுமத்துடனான கூட்டு முயற்சியை (சாங்சுன் உற்பத்தி) நிறுத்திவிட்டதாக டொயோட்டா கடந்த வாரம் கூறியிருந்தது. மேலும் எஃப்ஏடபுள்யூ உடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ள வோக்ஸ்வாகன், கடந்த வாரம் திங்கள் முதல் புதன் வரை அதன் 'வெஹிக்கில்' மற்றும் 'காம்போனென்ட்' ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

also read : உலகம் முழுதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 கோடியே 82 லட்சம், இந்தியாவிலும் அதிகம்- லான்செட் ஆய்வில் பகீர்
கொரோனா வைரஸால் மீண்டும் பல வகையான கட்டுப்பாடுகளை மற்றும் லாக்டவுன்களை சந்தித்து வரும் சீனாவின் தற்போதைய நிலையானது, இந்தியா உட்பட பல நாடுகளில், உலகளாவிய விநியோகச் சங்கிலி தொடர்புடைய இடையூறுகளை ஏற்படுத்தும் என்கிற அச்சம் மேலோங்கி உள்ளது. சீனாவில் லாக்டவுன்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடரும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு ஃபார்மா, எலக்ட்ரானிக்ஸ், ஸ்டீல் மற்றும் ஆட்டோமொபைல் துறைகள் - உதிரிபாகங்கள் மற்றும் இடைநிலை பொருட்களின் (இன்டர்மீடியேட் மெட்டீரியல்ஸ்) விநியோக பற்றாக்குறையின் விளைவாக - பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


ஏற்கனவே, நடந்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரினால் உலகப் பொருளாதாரம் பெரும் அழுத்தத்தின் கீழ் இருக்கும் நேரத்தில் சீனாவில் அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுன்கள் மற்றும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் பல சாத்தியமான பொருளாதார சிக்கல்களை இந்தியாவிற்கு ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: China, Corona

அடுத்த செய்தி